அதிநவீன வசதிகளுடன் சலோராவின் மொபைல்போன்கள் அறிமுகம்

Posted By: Staff

அதிநவீன வசதிகளுடன் சலோராவின் மொபைல்போன்கள் அறிமுகம்
டெல்லி: எல்சிடி டிவி மற்றும் மெமரி கார்டு தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமான சலோரா, மொபைல்போன் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.

எஸ்எம் 501 மற்றும் எஸ்எம் 401 ஆகிய இரண்டு மாடல்களுடன் சந்தையில் கால் பதித்துள்ள அந்த நிறுவனம், தனது மொபைல்போன்களை வடஇந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

நடுத்தரப் பிரிவு வாடிக்கையாளர்களை கருத்தில்க்கொண்டு அதிநவீன வசதிகளுடன் கூடிய வகையில் இரண்டு மொபைல்போன்களையும் வடிவமைத்துள்ளது சலோரா.

இரண்டு போன்களும் தொடுதிரை மூலம் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு போன்களும் ஆங்கிலம், தவிர ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் இயக்கும் வசதி கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 127 நகரங்களில் அந்த நிறுவனத்துக்கு 152 டிவி மற்றும் மெமரி கார்டு டீலர்கள் உள்ளனர்.

இதில், டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள டீலர்கள் மூலம் மொபைல்போன் விற்பனையை துவங்கியுள்ளது.

படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளில் உள்ள டீலர்களுக்கும் மொபைல்போன் விற்பனையை அந்த நிறுவனம்

கே- சீரிஸ் தொழில்நுட்ப்ததுடன் கூடிய இதன் பவர்புல் ஸ்பீக்கர்கள், அலாதியான ஒலி தரத்தை வழங்குகின்றன.

ஹோம்தியேட்டருடன் இணைத்துக்கொள்ளும் 3.5 மிமீ விட்டம் கொண்ட தனி ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

மனதுக்கு விரும்பும் கலர்களில் தேர்வு செய்யும் விதமாக, எண்ணற்ற கலர்களில் இந்த மொபைல்போன்கள் வந்துள்ளன.

இரண்டு போன்களும் டியூவல் சிம் கார்டுகள் பொருத்திக்கொள்ளும் வசதிகொண்டவை.

1.3 மெகாபிக்செல் கேமராவுடன் வீடியோ ரெக்கார்டிங் செய்யவும், சமூக வலைதளங்களுக்குள் எளிதில் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்எம்501 மாடல் ரூ.2999 விலையிலும், எஸ்எம் 401 மாடல் ரூ. 2499 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot