பொளக்குது விற்பனை.. ரூ.14000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற விவோ ஒய்28எஸ் (Vivo Y28s) போனுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோக பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ள இந்த விவோ ஒய்28எஸ் போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ ஒய்28எஸ் அம்சங்கள் (Vivo Y28s Specifications): இந்த விவோ போனில் 6.56 இன்ச் (1612 × 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 840 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) பேக் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), லைவ் போட்டோ (Live Photo) மற்றும் ப்ரோ மோட் (Pro Mode) வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமராவில் நைட் மோட், போர்ட்ராய்டு மோட் போன்ற பீச்சர்கள் வருகின்றன. பட்ஜெட்டில் பக்கா ஓஎஸ் கிடைக்கிறது.
அதாவது, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) பேக் செய்யப்பட்டுள்ளது. இதுவொரு 5ஜி மாடலாகும். ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்க பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) கொடுக்கப்பட்டுள்ளது.
4 ஜிபி ரேம் (4 ஜிபி விச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் (6 ஜிபி விச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுபோக 8ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மாடலும் கிடைக்கிறது. இந்த விவோ போனில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் போன்களில் வரும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), டாப் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Top Ported Speakers) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. IP64 டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
இந்த விவோ போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,499ஆக இருந்தது. இப்போது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.14,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விலையில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு ரூ.750 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
இந்த டிஸ்கவுண்ட்டை பெற எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்த வேண்டும். மேலும், ரூ.9000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, இந்த விவோ ஒய்28எஸ் போனை வெறும் ரூ.14,249 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். வின்டேஜ் ரெட் (Vintage Red) மற்றும் ட்விங்கிள் பர்பிள் (Twinkling Purple) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








