வெளுக்குது ஆர்டர்.. ரூ.14000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 16GB ரேம்.. 67W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் போன்களுக்கு மிகப்பெரும் விரும்பிகள் பட்டாளம் இருக்கிறது. இவர்களை தட்டித் தூக்கும்படியான அடிமட்ட விலைக்கு 108 எம்பி மெயின் கேமரா, 16 ஜிபி ரேம், 67W சூப்பர்வூர் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் (OnePlus Nord CE 3 Lite) கிடைக்கிறது. ரூ.19,999 பட்ஜெட்டுக்கு கிடைத்த இந்த போனின் விலை இப்போது, ஒன்பிளஸ் பிரியர்களே நம்ப முடியாதபடி குறைந்துள்ளது. விவரம் இதோ.
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் போன் இப்போது அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த போனின் கேமரா மட்டுமல்லாமல் டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்கள் ஒன்பிளஸ் பியர்களிடையே தனி ஈர்ப்பை பெற்றுள்ளது. அதிலும் பாஸ்டல் லைம் (Pastel Lime) வேரியண்ட் விற்பனையில் சக்கைப்போடு போட்டது.

இப்போது, அந்த மாடலே ரூ.5,176 விலை குறைப்பில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு கேமராவில் மிட்-ரேஞ்ச் லெவல் பீச்சர்களை எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 108 எம்பி கேமரா பேச்சுக்கு கொடுக்காமல் அதில் சாம்சங் எச்எம்6 சென்சார் (Samsung HM6) பேக் செய்யப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டரிலும் சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) உள்ளது.
இதுபோக மெயின் கேமராவுடன் 2 எம்பி டெப்த் மற்றும் மேக்ரோ ஆப்ஷன் கொண்ட செகண்டரி சிஸ்டம் கிடைக்கிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) மட்டும் கிடையாது. இருப்பினும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கிடைக்கிறது. ஆகவே, அடிமட்ட விலையில் மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் மெயின் மற்றும் செல்பீ கேமரா அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
அப்படியே டிஸ்பிளே பக்கம் பார்த்தால், 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு அசாகி டிராகன்டெயில் ஸ்டார் கிளாஸ் (Asahi Dragontail Star Glass) பாதுகாப்பும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனும் கிடைக்கிறது. 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டில் டிஸ்பிளே அவுட் கிடைக்கும். 240Hz டச் சாம்பிளிங் இருக்கிறது.
மீடியம் அவுட்டோர் அவுட் கொடுக்கும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவிலும் அமோலெட் பேனல் இல்லாததை தவிர குறை சொல்லும்படி ஏதுமில்லை. பர்ஃபாமென்ஸ் பொறுத்தவரை 2 வருடம் பழைய மாடல் என்பதால், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் (Qualcomm Snapdragon 695 6nm) சிப்செட் 5ஜி கனெக்டிவிட்டியுடன் கிடைக்கிறது.
இருப்பினும், கேமிங் விரும்பிகளுக்கான அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் மாடலில் 16 ஜிபி ரேம் எதிர்பார்க்கலாம். இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) செட்டிங்கில் கிடைக்கிறது.
128 ஜிபி மெமரி மற்றும் 1 டிபிக்கான எஸ்டி சிலாட் இருக்கிறது. பேட்டரியும் பக்காவாகவே இருக்கிறது. 5000mAh பேட்டரியுடன் 67W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் கிடைக்கிறது. இந்த நோர்ட் போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடையாது, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கரும், 3.5எம்எம் ஜாக்கும் உள்ளது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5ஜி போனின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் நம்ப முடியாதபடி வெறும் ரூ.14,823 விலைக்கு கிடைக்கிறது. இது ரூ.5,176 விலை குறைப்பில் கிடைப்பதாகும். இந்த விலைக்கு டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகள் தேவையில்லை. நேரடியாக விலையில் இருந்து குறைக்கப்பட்டு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications