Home
Mobile

யாரு விடுவா? 44W சார்ஜிங்.. 64எம்பி கேமரா.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.17,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

44W சார்ஜிங்.. 64எம்பி கேமரா.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

இப்போது விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது விவோ டி2 ஸ்மார்ட்போன் ஆனது 6.38-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 × 1080 பிக்சல்ஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ டி2 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Snapdragon 695) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

6ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

விவோ டி2 ஸ்மார்ட்போன் 64எம்பி பிமைரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளது. அதேபோல் குறைந்த எடையில் இந்த போன் வெளிவந்துள்ளது.

44W சார்ஜிங்.. 64எம்பி கேமரா.. ஆஃபரில் விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த விவோ டி2 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இதன் பேட்டரியை விரைவாக சாரஜ் செய்துவிட முடியும். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
25 percent discount on vivo T2 5G smartphone on Flipkart: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X