Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.15,000 விலை குறைப்பு.. 50MP கேமரா.. 4700mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் வெளியாகியதால், முந்தைய மாடல்களின் விலை நம்ப முடியாத அளவுக்கு குறைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது, ரூ.15,000 விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) கிடைக்கிறது. 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 4700mAh பேட்டரி கொண்ட இந்த போனின் விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ அம்சங்கள் (Samsung Galaxy S24 FE Specifications): இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஒன் யுஐ 6.1.1 (One UI 6.1.1) கிடைக்கிறது. கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்களை இந்த யுஐ கொடுக்கிறது. சாம்சங் எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Samsung Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கார்டு மட்டும் டெகா கோர் (Deca Core) சிப்செட் வருகிறது.

பொளக்குது விற்பனை.. ரூ.15,000 விலை குறைப்பு.. 50MP கேமரா.. எந்த மாடல்?

4என்எம் சாம்சங் எக்ஸினோஸ் 2400இ (4nm Samsung Exynos 2400e) பிராசஸர் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. பிரீமியமான டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது.

மெயின் கேமரா மட்டுமல்லாமல், டெலிபோட்டோவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் உள்ளது. மேலும், டெலிபோட்டோவில் 3X ஆப்டிகல் ஜூமிங் செய்து கொள்ளலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போனில் 10 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Gorilla Glass Victus+) பாதுகாப்பு உள்ளது.

ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம். 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேரிங் சப்போர்ட் கொண்ட 4700mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரியுடன் 8.0 எம்எம் தடிமன் மற்றும் 213 கிராம் எடை வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ போனில் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் கொடுக்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) கொடுக்கிறது. டைப்-சி சார்ஜிங் மற்றும் டைப்-சி ஆடியோ (Audio) சப்போர்ட் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ விலை (Samsung Galaxy S24 FE Price): இந்த சாம்சங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 59,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.44,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுவொரு நேரடி விலை குறைப்பு சலுகையாகும். ஆகவே, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தேவையில்லை.

ஆகவே, ரூ.15,000 விலை குறைப்பில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். ப்ளூ (Blue), கிராஃபைட் (Graphite) மற்றும் மின்ட் (Mint) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு இந்த மாடல் பக்கா வொர்த்தாகவே இருக்கிறது. ஏனென்றால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடைக்கிறது. இது மிகவும் பழைய ஓஎஸ் ஒன்றும் கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Samsung Galaxy S24 FE With 8GB RAM in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X