பிளிப்கார்ட் மிரளுது.. ரூ.11000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
வெறும் ரூ.11000 பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி ஆட்டோபோகஸ் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்15 (Samsung Galaxy M15) 5ஜி போனானது, நம்ப முடியாத பட்ஜெட்டில் பிளிப்கார்ட்டில் (Flipkart) விற்பனைக்கு வந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்15 அம்சங்கள் (Samsung Galaxy M15 Specifications): இந்த சாம்சங்கில் 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera Syatem) வருகிறது.

இந்த வைடு ஆங்கிள் மூலம் லேண்ட்ஸ்கேப் (Landscapes), மற்றும் க்ளோஸ்-அப் (Close-up) போட்டோகிராபியில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஆட்டோபோகஸ் மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் டிரிபிள் ரியர் கேமரா வருவது, வரவேற்கத்தக்கது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 போனில் 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவை போலவே பேட்டரி சிஸ்டமும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. 6000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. வழக்கமான யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (USB Type-C Charging) கொண்டிருக்கிறது.
இந்த பேட்டரி மூலம் நாள் முழுவதும் பேக்கப் எதிர்பார்க்கலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 போனின் டிஸ்பிளே அம்சங்களை பார்க்கையில், 6.5 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) பேனல் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது.
அதேபோல 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 16 மில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. இதுபோக டைனாமிக் ரேம் மற்றும் 1 டிபிக்கான எஸ்டி சிலாட் வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. இதற்கு 4 ஜென் அப்கிரேட் கொடுக்கப்படுகிறது. ஒன்யுஐ 6 (OneUI 6) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமைன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது.
ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot), பாட்டம் ஃபயர்ட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி வருகிறது.
அதேபோல டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 போனானது, அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 13,299ஆக இருந்தது.
ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.11,999 பட்ஜெட்டில் விற்பனையாகிறது. இந்த விலையிலும் பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த போனை ரூ.11,249 பட்ஜெட்டில் வாங்கலாம். செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue), ஸ்டோன் கிரே (Stone Grey) மற்றும் ப்ளூ டாபஸ் (Bule Topaz) கலரில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








