வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ரூ.11,149 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி, 50MP கேமரா.. ஆஃபரில் Samsung 5ஜி போன்!
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது black friday sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.11,149 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M15 5G Specifications): தரமான மீடியாடெக் டைமைன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் உடன் இந்த சாம்சங் போன் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போன்.
அதேபோல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி. மேலும் 1080 x 2340 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது . இந்த ரியர் கேமராக்கள் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (10x Digital Zoom), ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும்.
குறிப்பாக செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இதில் உள்ளன.பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் மாடல்.

6000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) உள்ளது. குறிப்பாக இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
மேலும் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications