Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.12,999 போதும்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட் விலையில் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் (Samsung Galaxy M15 5G Prime Edition) போனுக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,499ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.13,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதுபோக ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் இந்த பிரைம் எடிஷன் போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.12,999 போதும்.. 50MP கேமரா மாடல்!

மேலும், ரூ.12,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை பெற்று கொள்ளலாம். இந்த 8 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ரூ.12,999 பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் இருக்கிறதா? ஆண்ட்ராய்டு ஓஎஸ் எப்படி? கேமரா பீச்சர்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் அம்சங்கள் (Samsung Galaxy M15 5G Prime Edition Specifications): இந்த சாம்சங் போனில் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (Octa Core 6nm MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, 5ஜி பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டைவிட கூடுதலாக எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது.

மாலி 57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 6 (One UI 6) வருகிறது. 128 ஜிபி மெமரிக்கு மேல் கூடுதலாக ஸ்டோரேஜ் வேண்டுமானால், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கான சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கிடைக்கிறது. டிஸ்பிளேவில் பக்கா பேனல் கிடைக்கிறது.

ஆகவே, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ரவுண்டெட் கார்னர் டிசைனில் வாட்டர் டிராப் நட்ஜ் டிசைன் கிடைக்கிறது. இந்த பிரைம் எடிஷனில் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் 50 எம்பி ரியர் மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் கிடைக்கிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷனில் பெரிய 6000mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வருகிறது. மேலும், 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ (5G SA, NSA), டூயல் வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் உள்ளது. ப்ளூ டாபஸ் (Blue Topaz), செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue) மற்றும் ஸ்டோன் கிரே (Stone Grey) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Samsung Galaxy M15 5G Prime Edition in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X