Samsung போட்டான் பாரு.. வெறும் ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 2TB மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்07 (Samsung Galaxy F07) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த விலைக்கு ரூ.15,000 மதிப்பில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான டிசைன் மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 25 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.375 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.7,124 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

இந்த விலைக்கு எந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் கொடுக்க முடியாதபடி 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து உள்ளது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுத்து உள்ளது. கிரீன் (Green) கலரில் மட்டுமே இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. அதேபோல 4 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமே இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனில் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்07 அம்சங்கள் (Samsung Galaxy F07 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (Octa Core MediaTek Helio G99) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (ARM Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
ஒன் யுஐ 7.0 (One UI 7.0) இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. குயூக் ஷேர் (Quick Share), ஸ்மார்ட் ஸ்விட்ச் (Smart Switch) போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்டுள்ள 6.7 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் இந்த பிஎல்எஸ் (PLS) டிஸ்பிளேவுக்கு உள்ளது.
மேலும், 16 மில்லியன் கலர் டெப்த் கொண்டுள்ளது. வெறும் 7.6 மிமீ தடிமனில் 5000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. மேலும், 184 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே, பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்லிம் மாடலாகவும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போன் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் இந்த கேமராவுக்கு கிடைக்கிறது. ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். மேலும், ஹைப்பர்லேப்ஸ் மோட் (Hyperlapse Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்களையும் இந்த கேமரா கொடுத்து உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு 8 எம்பி கேமரா உள்ளது.
இதில் ஆட்டோ போகஸ் கிடைக்காது. பிக்சட் போகஸ் (Fixed Focus) மட்டுமே கிடைக்கும். இருப்பினும், ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Fingerprint Sensor) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஸ்டீரியோ இயர்போன் ஜாக் கிடைக்கிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3), வை-பை 802.11ஏ (Wi-Fi 802.11a) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








