ஆர்டர் கொட்டுது.. ரூ.10,499 பட்ஜெட்ல AI கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த போன்?
அமேசான் இயர் எண்ட் ஸ்மார்ட்போன் டீல்ஸ் (Amazon Year End Smartphone Deals) விற்பனையில் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 50எம்பி கேமரா, 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் கொண்ட ரெட்மி 13சி (Redmi 13C) போனுக்கு மிரட்டலான தள்ளுபடி கிடைக்கிறது.
ரெட்மி 13சி அம்சங்கள் (Redmi 13C Specifications): இந்த ரெட்மி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 12என்எம் (Octa Core MediaTek Helio G99 12nm) சிப்செட் வருகிறது. மாலி-ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல எம்ஐயுஐ 14 ஓஎஸ் (MIUI 14 OS) சப்போர்ட் வருகிறது. இந்த ரெட்மி போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதன் 8 ஜிபி மெமரி வேரியண்ட்டில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் இடம் பெற்றுள்ளது. இந்த மாடலில் 6.74 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) வருகிறது. ஆகவே, 50 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + ஏஐ லென்ஸ் இடம் பெற்றுள்ளது.
அதோடு 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் கிளாசிக் ஃபிலிம் ஃபில்டர்கள் (Classic Film Fliters) வருகின்றன. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் இடம் பெற்றுள்ளது.
இந்த ரெட்மி 13சி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போன் 192 கிராம் எடை கொண்டுள்ளது. அதேபோல 8.09 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. இதுவொரு 4ஜி போனாகும். ஆகவே, டூயல் 4ஜி (Dual 4G), வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.1 மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த ரெட்மி 13சி போனில் பிளாக் (Black) மற்றும் கிரீன் (Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த ரெட்மி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,499ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவே மலிவான விலை என்பதால் விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த சூழலில் அமேசான் இயர் எண்ட் ஸ்மார்ட்போன் டீல் விற்பனையை முன்னிட்டு மேலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை அமேசான் தளத்தில் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால், ரூ.1000 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
அதோடு ரூ.10,850 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, இதன் 4 ஜிபி வேரியண்ட்டை வெறும் ரூ.7,999க்கும், 8 ஜிபி வேரியண்ட்டை ரூ.10,499க்கும் வாங்கி கொள்ளலாம். கம்மி பட்ஜெட்டில் நல்ல ரேம் மற்றும் கேமரா அம்சங்கள் கொண்ட 4ஜி போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த ரெட்மி 13சி மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








