Home
Mobile

ஆர்டர் போட்ருங்க.. வெறும் ரூ.9,999 போதும்.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) போனுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் 5ஜி சிம் சப்போர்ட், 50எம்பி கேமரா, தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

தற்போது அமேசான் தளத்தில் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,499 விலையில் விற்;பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,999 இருந்தால் வாங்கிவிட முடியும்.

வெறும் ரூ.9,999 போதும்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி 13சி 5ஜி அம்சங்கள் (Redmi 13C 5G Specifications): 6.74 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதுதவிர இந்த போனின் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ்(Corning Gorilla Glass) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6எம்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது.

வெறும் ரூ.9,999 போதும்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி 13சி 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் டூயல் 5ஜி சிம் சப்போர்ட் கொண்டுள்ளது ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன்.

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செலபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது.

வெறும் ரூ.9,999 போதும்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆனாலும் ஃபிலிம் கேமரா (FilmCamera), ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), எச்டிஆர் (HDR), பால்ம் ஷட்டர் (Palm Shutter), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), சாப்ட்-லைட் ரிங் (Soft-light Ring) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 18 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. பின்பு 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3, ஜிபிஎஸ் (GPS), சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), ஏஐ பேஸ் அன்லாக் (Al Face Unlock), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack)போன்ற வசதிகள் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Redmi 13C 5G With 4GB RAM, 5000mAh Battery in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X