Home
Mobile

அசூர விற்பனை.. ரூ.11,998 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) பட்டையை கிளப்பும் கூப்பன் டிஸ்கவுண்ட் உடன் ரியல்மி நார்சோ 70எக்ஸ் (Realme NARZO 70x) போன் விற்பனைக்கு வந்துள்ளது. 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, வாட்டர் டச் டிஸ்பிளே, விசி கூலிங் சிஸ்டம் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் மற்றும் 7.97 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் டிசைன் கொண்ட இந்த போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

ரியல்மி நார்சோ 70எக்ஸ் விலை (Realme NARZO 70x Price): இந்த நார்சோ மாடலில் 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.13,498ஆக இருக்கிறது.

அசூர விற்பனை.. ரூ.11,998 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 45W சார்ஜ்!

இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1500 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுவொரு கூப்பன் டிஸ்கவுண்ட் சலுகையாகும். ஆகவே, எந்தவொரு பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டும் தேவைப்படாது. வெறும் ரூ.11,998 பட்ஜெட்டில் இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் போனை வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி நார்சோ 70எக்ஸ் அம்சங்கள் (Realme NARZO 70x Specifications): இந்த நார்சோவில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது.

1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) மற்றும் டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சப்போர்ட் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் 120Hz ரெஃரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட மாடலாகும்.

அசூர விற்பனை.. ரூ.11,998 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 45W சார்ஜ்!

மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ரியல்மி போனில் 45W சூப்பர்வூக் சார்ஜிங் (SUPERVOOC Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 188 கிராம் எடை, 7.97 எம்எம் தடிமன் வருகிறது.

இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோ கேமரா கொண்ட டூயர் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera) வருகிறது. இந்த கேமராவில் ஏஐ பவர்ட் போட்டோகிராபி சப்போர்ட் உள்ளது. ஆகவே, ஆட்டோ பேலன்ஸ் லைட்னிங், கலர் கரெக்சன் செய்து கொள்ள கூடியது.

டிஐஎஸ் (DIS), ஸ்ட்ரீட் மோட் (Street Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System), டைனாமிக் பட்டன் (Dynamic Button) போன்ற பிரத்யேக பீச்சர்களும் வருகின்றன. இந்த ரியல்மி போனில் டூயல் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) வருகின்றன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) வருகிறது. இந்த ரியல்மி நார்சோ 70எக்ஸ் போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ சப்போர்ட் உள்ளது. ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Realme NARZO 70x 5G With 50MP Camera in Amazon Sale Here Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X