Home
Mobile

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ரூ.10,499 பட்ஜெட்ல 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Realme 5ஜி போன்!

50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், 5000mAh பேட்டரி உடன் குறைந்த விலையில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விருப்பம் இருக்கிறதா? அப்போ இந்த பிளிப்காரட் ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி சி65 5ஜி (realme C65 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ரியல்மி ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்!

ரியல்மி சி65 5ஜி அம்சங்கள் (realme C65 5G discount): 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டு வெளிவந்தது இந்த அட்டகாசமான ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (6nm octa-core MediaTek Dimensity 6300) உடன் ரியல்மி சி65 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஏஆர்எம் மாலி-ஜி57 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரியல்மி சி65 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக ரியல்மி சி65 5ஜி போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்!

5000mAh பேட்டரி உடன் ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது இந்த ரியல்மி போன்.

இதுதவிர டைனமிக் பட்டன் மற்றும் ஏர் கெஸ்சர் அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, க்யூஇஸட்எஸ்எஸ் (QZSS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் மலிவு விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
15 Percent Discount on realme C65 5G with 4GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X