Home
Mobile

பொளக்குது ஆர்டர்.. வெறும் ரூ.9549 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அறக்க பறக்க ஆர்டர் செய்யும் விதமாக 108எம்பி கேமரா, 12ஜிபி ரேம், 2டிபி மெமரி, 18W சார்ஜிங் பீச்சர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா ஸ்லிம் பாடி கொண்ட ரியல்மி சி53 (Realme C53) போனானது, கம்மி விலையில் கிடைக்கிறது.

ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): இந்த ரியல்மியில் 108 எம்பி மெயின் கேமரா + டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 3X இன்-சென்சார் ஜூம் (In-sensor Zoom) வருகிறது. சிட்டி ஸ்ட்ரீட் ஃபில்டர் (City Street Filter), சீக்ரெட் கார்டன் ஃபில்டர் (Secret Garden Filter) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

பொளக்குது ஆர்டர்.. வெறும் ரூ.9549 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்!

மேலும், நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), பொக்கெ எஃபெக்ட் கன்ட்ரோல் (Bokeh Effect Control) பீச்சர்கள் மற்றும் 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 எம்பி ஏஐ செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவிலும் பொக்கெ எஃபெக்ட் கன்ட்ரோல், போர்ட்ராய்டு மோட், பியூட்டி மோட் வருகிறது.

720P வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. ஆகவே, இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் கேமராவில் பக்கா பீச்சர்கள் கொண்ட மாடலாக ரியல்மி சி53 இருக்கிறது. 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. காலிங், சார்ஜிங் நோட்டிபிகேஷன்களுக்காக மினி கேப்சூல் (Mini Capsule) பீச்சர் வருகிறது. பட்ஜெட் மாடலென்பதால், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப் வருகிறது.

பொளக்குது ஆர்டர்.. வெறும் ரூ.9549 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்!

மேலும், ரியல்மி யுஐ டி எடிஷன் (realme UI T Edition) மற்றும் மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ரியல்மி சி53 போனில் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் வருகிறது. மேலும், 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கிறது. 18W குயிக் சார்ஜிங் (Quick Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 7.99 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது.

அதேபோல 186 கிராம் எடை மட்டுமே வருகிறது. பட்ஜெட் மாடல்களில் கொடுக்கப்படும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) வருகிறது. சாம்பியன் கோல்டு மற்றும் சாம்பியன் பிளாக் கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9999 பட்ஜெட்டில் விற்பனையாகிறது. மேலும், ரூ.450 கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ரியல்மி சி53 போனை ரூ.9,549 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Realme C53 With 108MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X