Home
Mobile

விட்றாதீங்க.. வெறும் ரூ.8,999 போதும்.. 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் ரியல்மி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி சி53 ஸ்மார்ட்போனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி போன் 108எம்பி கேமரா, 5000எம்ஏச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ரியல்மி சி53 போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி53 போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,999 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த 108எம்பி கேமரா கொண்ட ரியல்மி சி53 போனை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்.

வெறும் ரூ.8,999 போதும்.. ஆஃபரில் ரியல்மி போன்.. எந்த மாடல்?

ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): ஆக்டோ-கோர் யுனிசோக் டி612 (Octa-Core UNISOC T612)சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இந்த ரியல்மி போன் இயங்குகிறது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்

6.74 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது ரியல்மி சி53 ஸ்மார்ட்போன். பின்பு 1600 x 720 பிக்சல்ஸ்,90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 560 பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் ஆனது 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது.

அதேபோல் டைம் லேப்ஸ், போர்ட்ராய்ட் மோட், எச்டிஆர் மோட், ஏஐ சீன் ரெககனைசேஷன், ஸ்லோவ் மோஷன், போக்கே எஃபெக்ட் கன்ட்ரோல், 3எக்ஸ் ஜூமிங் சென்சார் போன்ற கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவும் இதில் உள்ளது. இந்த போன் சாம்பியன் கோல்டு மற்றும் சாம்பியன் பிளாக் ஆகிய கலர்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

வெறும் ரூ.8,999 போதும்.. ஆஃபரில் ரியல்மி போன்.. எந்த மாடல்?

சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி போன். 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி சி53 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

டூயல் 4ஜி சிம் சப்போர்ட், ப்ளூடூத் 5, டைப் - சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. இந்த ரியல்மி போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி, 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங், பெரிய டிஸ்பிளே மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் மலிவு விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
25 percent discount on Realme C53 phone on Flipkart: Check new price here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X