Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.3000 ஆஃபரில் POCO போன்.. 100W சார்ஜிங், 6500mAh பேட்டரி.. OIS கேமரா.. எந்த மாடல்?

போகோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. மிட்-பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் விலையில் கிடைக்கிறது. பெரிய பேட்டரி, டாப் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 25 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.32,999 விலைக்கு வாங்கி கொள்ள முடியும். மேலும், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.3,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.3000 ஆஃபரில் POCO போன்.. 100W சார்ஜிங்!

ஆகவே, ரூ.29,999 விலைக்கு போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.4,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.1,650 தள்ளுபடி கிடைக்கிறது. இதில் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. பீச்சர்களை பார்க்கலாம்.

போகோ எக்ஸ்8 ப்ரோ அம்சங்கள் (POCO X8 Pro Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.59 இன்ச் (2756 x 1268 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz ரேட்டிங் PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது. ஓடிடி பிரியர்களுக்காக டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. மேலும், டிசி டிம்மிங் (DC Dimming) கொண்ட டிஸ்பிளேவாகவும் இது இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கிடைக்கிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.3000 ஆஃபரில் POCO போன்.. 100W சார்ஜிங்!

4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8500 Ultra 4nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Arm Mail G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஐஎம்எக்ஸ்882 (IMX882) சென்சாருடன் 50 எம்பி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 20 எம்பி செல்பீ கேமரா மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

8.38 எம்எம் தடிமன் பாடியில் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 3டி ஐஸ்-லூப் கூலிங் சிஸ்டம் (3D ice-loop Cooling System) மற்றும் 201.47 கிராம் எடை கொடுத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) உள்ளது.

IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் & IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொண்ட மாடலாக இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கிறது. பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும கிரீன் (Green) ஆகிய மூன்று கலர்களில் இந்த போகோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
25 Percent Discount on POCO X8 Pro With 6500mAh Battery 100W Charging on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X