Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ரூ.13,999 போதும்.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் Poco 5ஜி போன்..

பிளிப்கார்ட் தளத்தில் தரமான போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (POCO X6 Neo 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 108எம்பி கேமரா, டால்பி அட்மாஸ், 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இப்போது பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.13,999 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் Poco 5ஜி போன்..

போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Neo 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் (1080×2400 பிக்சல்கள்) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இதுதவிர 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection) போன்ற சிறப்பான அம்சங்களும் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக மிட்-பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ((Android 13 OS) பேஸ்டு எம்ஐயுஐ 14 (MIUI 14) மூலம் இயங்குகிறது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி 57 எம்சி 2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போக்கோ போனை நம்பி வாங்கலாம்.

108 எம்பி ப்ரோ கிரேடு மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன். போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Filters), 3x இன்-சென்சார் ஜூமிங்உள்ளிட்ட கேமரா அம்சங்கள் உள்ளன.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் Poco 5ஜி போன்..

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இதில் உள்ளது.

5000mAh பேட்டரி உடன் இந்த போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் இன்பிராரெட் மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதி இதில் உள்ளது. அதேபோல் அஸ்ட்ரல் பிளாக், ஹொரைசன் ப்ளூ மற்றும் மார்ஷியன் ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on POCO X6 Neo 5G With 108MP camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X