மிரளுது ஆர்டர்.. அடிமட்ட ரேட்டுல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) தீபாவளி பண்டிகையொட்டி 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் மெயின் கேமரா, கேலக்ஸிகோர் செல்பீ ஷூட்டர், 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஏஐ எரைசர், ஏஐ பெஸ்ட் பேஸ், ஏஐ கிளியர் பேஸ், ஏஐ ஸ்டூடியோ, ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் போன்ற ஏஐ பீச்சர்களுடன் வெளியான ஓப்போ ரெனோ12 5ஜி (OPPO Reno12 5G) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஓப்போ ரெனோ12 5ஜி அம்சங்கள் (OPPO Reno12 5G Specifications): இந்த ஓப்போவில் கேமரா பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக வந்துள்ளன. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stablization) மற்றும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

ஓம்னிவிஷன் ஓவிஓ2பி10 (Omnivision OVO2B10) சென்சாருடன் மேக்ரோ கேமரா பேக் செய்துள்ளது. 32 எம்பி செல்பீ ஷூட்டரும் கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GalaxyCore GC32E2) சென்சாருடன் கிடைக்கிறது. மெயின் மற்றும் செல்பீ ஷூட்டரில் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. லைவ் போட்டோ (Live Photo), ப்ரோ போர்ட்ராய்டு மோட் (Pro Portrait Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
இதுபோக ஏஐ கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face), ஏஐ ஸ்டூடியோ (AI Studio) மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) கிடைக்கின்றன. மேலும், ஏஐ ரெக்கார்டிங் சம்மரி (AI Recording Summary), ஏஐ ரைட்டர் (AI Writer), ஏஐ கிளியர் வாய்ஸ் (AI Clear Voice) பீச்சர்கள் உள்ளன.
பிரத்யேகமாக பீக்கன்லிங்க் (BeaconLink) பீச்சர் வருகிறது. இந்த பீச்சர் மூலம் மொபைல் சிக்னல் இல்லாமலும் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும். இது ப்ளூடூத் சிக்னல் மூலம் கிடைக்கிறது. ஆகவே, குறிப்பிட்ட தூரம் வரையில் மட்டுமே ரேஞ்ச் கிடைக்கும். இந்த ஓப்போ போனில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ( Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு உள்ளது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் ( FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் எனர்ஜி 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Energy 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது.
இந்த ஓப்போ ரெனோ12 5ஜி போனில் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. IP65 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. இந்த ஓப்போ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 32,999ஆக இருந்தது.
இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.3,299 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.29,700 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளது. சன்செட் பீச் (Sunset Peach), மேட் பிரவுண் (Matte Brown) மற்றும் ஆஸ்ட்ரோ சில்வர் (Astro Silver) கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








