Home
Mobile

டிஸ்கவுண்ட் வேட்டை.. ரூ.27999 போதும்.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் அமேசான் (Amazon) தளத்தில் குவியும்படியான டிஸ்கவுண்ட்டில் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி கேமரா, 100W சார்ஜிங், 16 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) போன் விற்பனையாகிறது.

சோனி சென்சார் மெயின் கேமரா மட்டுமல்லாமல், ஓம்னிவிஷன் செல்பீ கேமரா, ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 சிப்செட், அட்ரினோ கிராபிக்ஸ் என்று இந்த ஒன்பிளஸ் 11ஆர் போனின் மற்ற அம்சங்களும் பின்னிப்பெடல் எடுக்கிறது. முழு அம்சங்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களுக்கு செல்வோம்.

டிஸ்கவுண்ட் வேட்டை.. ரூ.27999 போதும்.. SONY கேமரா.. 100W சார்ஜிங்!

ஒன்பிளஸ் 11ஆர் அம்சங்கள் (OnePlus 11R Specifications): இந்த போனில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் வருகிறது.

ஒன்பிளஸ் போன்களில் வரும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது.

இந்த போனில் 50 எம்பி பிரைமரி கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார்) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (ஓம்னிவிஷன் ஓவி08டி10 சென்சார்) + 2 எம்பி மேக்ரோ கேமரா (ஓம்னிவிஷன் ஓவி02பி10 சென்சார்) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

டிஸ்கவுண்ட் வேட்டை.. ரூ.27999 போதும்.. SONY கேமரா.. 100W சார்ஜிங்!

இந்த பிரீமியம் சென்சார் மட்டுமல்லாமல், மெயின் கேமராவில் ஈஐஎஸ் (EIS) மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜிகள் வருகின்றன. அதேபோல ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 1080P வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

கேமராவை போலவே டிஸ்பிளே பீச்சர்களும் அல்ட்ரா பிரீமியமாக இருக்கின்றன. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) சூப்பர் ஃப்ளூயிட் அமோலெட் (Super Fluid AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 360Hz டச் சாம்பிளிங் ரேட், டிசிஐ பி3 கலர் காமட், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1440Hz PWM டிம்மிங் பிரிகொன்சி வருகிறது. ஹைப்பர்டச் என்ஜின் (HyperTouch Engine) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல பேட்டரி ஹெல்த் என்ஜின் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த பேட்டரிக்கு 100W சூப்பவூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், டைப்-சி ஆடியோ வருகிறது. கேலடிக் சில்வர், சோனிக் பிளாக் மற்றும் சோலார் ரெட் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டப்போது, இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.39,999ஆக இருந்தது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் வெறும் ரூ.29,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுபோக ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.27,999 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on OnePlus 11R 5G With 16GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X