Home
Mobile

OnePlus செய்கை.. அசால்ட்டா ரூ.14000 கட்.. QHD+ டிஸ்பிளே.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஹசல் பிளாட் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, சோனி சென்சார் டெலிபோட்டோ கேமரா, டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ உள்ளிட்ட பிரீமியம் பீச்சர்களுடன் ரூ.56,000 பட்ஜெட்டில் வெளியான ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) போனானது, இப்போது ரூ.14,000 விலை குறைப்பில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போனின் முழு பீச்சர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை பார்ப்போம்.

ஒன்பிளஸ் 11 5ஜி அம்சங்கள் (OnePlus 11 5G Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் டால்பி விஷன் (Dolby Visio) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (3216 x 1440 பிக்சல்கள்) கியூஎச்டிபிளஸ் (QHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

OnePlus செய்கை.. அசால்ட்டா ரூ.14000 கட்.. QHD+ டிஸ்பிளே.. SONY கேமரா!

மேலும், எச்டிஆப்10பிளஸ் (HDR10+) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவொரு எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளே மாடலாகும். ஆகவே, பிரீமியம் குவாலிட்டி டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த போனில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் உள்ளது. பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்581 சென்சாருடன் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் உள்ளது. அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ சப்போர்ட் வருகிறது. மேலும், சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சாருடன் 32 டெலிபோட்டோ கோமரா வருகிறது. இந்த டெலிபோட்டோவில் 2X ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. இந்த கேமராவில் ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

OnePlus செய்கை.. அசால்ட்டா ரூ.14000 கட்.. QHD+ டிஸ்பிளே.. SONY கேமரா!

ஏஐ சீன் என்ஹான்ஸ்மென்ட் (AI Scene Enhancement), ஏஐ ஹைலைட் வீடியோ (AI Highlight Video), அல்ட்ரா ஸ்டெடி ப்ரோ (Ultra Steady Pro), ராவ் பிளஸ் ஃபைல் (Raw Plus File) உள்ளிட்ட பிரத்யேக கேமரா பீச்சர்கள் வருகின்றன. இந்த ஒன்பிளஸ் போனில் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சார் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட்சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் வருகிறது.

டைட்டன் பிளாக் மற்றும் எடர்னல் கிரீன் ஆகிய 2 கலர்களின் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.56,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் வெறும் ரூ.42,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,000 விலை குறைப்புடன் இந்த போனை வாங்கலாம். மேலும் ரூ.1250 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on OnePlus 11 5G With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X