Home
Mobile

வொர்த்து வர்மா.. ரூ.8000 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே மிரளும்படி முதல்முறையாக ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் கொண்ட போனாக ஐடெல் பி55டி (itel P55T) மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. 6000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, டைனாமிக் பார் போன்ற அம்சங்கள் கொண்டிருந்தும் ரூ.8000 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

ஐடெல் பி55டி அம்சங்கள் (itel P55T Specifications): இந்த ஐடெல் போனில் டைனாமிக் பார் (Dynamic Bar) சப்போர்ட் கொண்ட 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும்.

ரூ.8000 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W சார்ஜிங் மாடல்?

அதோடு 267 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்டிருக்கிறது. இந்த டைனாமிக் பார் பீச்சரானது, காலிங், பேட்டரி மற்றும் பேஸ் அன்லாக் நோட்டிபிகேஷன்களுக்காக வருகிறது. இந்த ஐடெல் பி55டி போனில் முதல்முறையாக ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 14 Go Edition) ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் வருகிறது. இந்த ஐடெல்லில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

பட்ஜெட்டிலும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ சென்சார் (AI Sensor) வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. பேட்டரி அம்சமானது, பிரம்மாண்டமாகவே இருக்கிறது. 6,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரிக்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கொண்டுள்ளது.

அதேபோல யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), டூயல் பேண்ட் வை-பை (Dual Band WiFi), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிஎன்எஸ்எஸ் (GNSS) போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன. பேஸ் அன்லாக் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது.

இந்த ஐடெல் பி55டி போனில் பிரில்லியன்ட் கோல்டு (Brilliant Gold), அரோரா ப்ளூ (Aurora Blue) மற்றும் மூன்லைட் பிளாக் (Moonlight Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த போனானது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தள்ளுபடி உடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை வெறும் ரூ.8,199ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையிலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.410 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.7,789 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on itel P55T With 6000mAh Battery in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X