Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ரூ.13,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் CMF 5ஜி போன்..

பிளிப்கார்ட் தளத்தில் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 5000mAh பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேற சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சிஎம்எப் போன் 1 மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சிஎம்எப் போன் 1 மாடலுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.13,999 விலையில் இந்த போனை வாங்க முடியும்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் CMF 5ஜி போன்..

சிஎம்எப் போன் 1 அம்சங்கள் (CMF Phone 1 Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே வசதி இந்த போனில் உள்ளது. 2400 ×1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 960Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (960Hz PWM dimming) உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் இந்த சிஎம்எப் போன் 1 அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சிஎம்எப் போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

Nothing OS 2.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் சிஎம்எப் போன் 1 வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும். இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical
Fingerprint Sensor), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) வசதிகளும் இந்த சிஎம்எப் போனில் உள்ளன.

குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சிஎம்எப் போன் 1 மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் CMF 5ஜி போன்..

சிஎம்எப் போன் 1 ஆனது 50எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கறி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

அதேபோல் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது சிஎம்எப் போன் 1. மேலும் 5000எம்ஏச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த போன். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C) உள்ளிட்ட கனெக்ட்டிவிட்டி இதில் உள்ளன.

Best Mobiles in India

English summary
25 Percent Discount on CMF Phone 1 with 6GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X