எச்டிசி தன்டர்போல்ட் மற்றும் மோட்டோ ஏட்ரிக்ஸ் பற்றிய ஒப்பீடு!

By Super
|
எச்டிசி தன்டர்போல்ட் மற்றும் மோட்டோ ஏட்ரிக்ஸ் பற்றிய ஒப்பீடு!
இரண்டு புதிய ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தைக்கு வர உள்ளது. எச்டிசி தன்டர்போல்ட் என்ற மாடலையும், மோட்டோரோலா நிறுவனம் ஏட்ரிக்ஸ் என்ற மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது. இரண்டு மொபைல்களுமே ஒரே மாதிரியான வடிவம் கொண்டதாக இருக்கின்றன.

இதில், மோட்டோரோலா ஏட்ரிக்ஸ் 4ஜி கூடுதல் அழகைக் கொண்டதாகத் தெரிகிறது. இந்த இரண்டு மாடல்களுமே 3ஜி சிடிஎம்ஏ வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. மோட்டோ ஏட்ரிக்ஸ் மொபைல் 4ஜி எச்எஸ்சிடிஏ வசதியையும் கொண்டுள்ளது.எச்டிசி தன்டர்போல்ட் 164 எடையைக்கொண்டுள்ளது. மோட்டோரோலா ஏட்ரிக்ஸ் 135 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

எச்டிசியைவிட ஏட்ரிக்ஸ் சிறிது எடை குறைவாக உள்ளது. எனவே இதனைக் கையாள்வது மிகவும் எளிது. தன்டர்போல்ட், ஏட்ரிக்ஸ் இரண்டுமே 16 எம் கலர் கெப்பாசிட்டிவ் டிஎப்டி டச் ஸ்கிரீன் கொண்டது. தன்டர்போல்ட் போனில் 4.3 இஞ்ச் திரை 480 X 800 பிக்ஸல் ரிசல்யூஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ஏட்சிக்ஸ் போனில் 4 இஞ்ச் திரை 540 X 960 பிக்ஸல் ரிசல்யூஷன் கொண்டதாகத் தெரிகிறது. தன்டர்போல்ட் மாடலில் எச்டிசி சென்ஸ் வி2.0 யூஐ பயன்டுத்தப்பட்டுள்ளது.

ஏட்ரிக்ஸ் மொபைலில் லைவ் விட்கெட்ஸுடன் மோட்டோபுலர் யூஐ வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மொபைல்களிலும் ஆக்லிலரோமீட்டர், கொரில்லா கிளாஸ் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்ஸார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஏட்ரிக்ஸ் மொபைலில் பையோமெட்ரிக் பிங்கர்பிரின்ட் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எச்டிசி, ஏட்ரிக்ஸ் இரண்டிலும் 3.5 ஆடியோ ஜேக் மற்றும் மல்டி டச் வழங்கப்பட்டுள்ளது.

தன்டர்போல்டில் சவுன்ட் ஆடிபிலிட்டி சற்று அதிக துல்லியம் கொண்டதாகத் தெரிகிறது. எச்டிசி தன்சர்போல்டில் ரேம் 768 எம்பி மட்டுமே உள்ளது. ஏட்ரிக்ஸ் மாடலில் 1ஜிபி ரேம் உள்ளதால் தன்டர்போல்டைவிடவும் வேகமாக இயங்கும் தன்மை கொண்டது. இரண்டு மாடல்களுமே மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இதன் மெமரியை 32 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

தன்டர்போல்ட் மொபைலில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம் இல்லை. மோட்டோரோலா ஏட்ரிக்ஸ் ஜிபிஆர்எஸ், எட்ஜ், வைபை ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. இரண்டிலுமே ஆன்ராய்ட் வி2.2 பிரையோ வசதி உள்ளது. ஏட்ரிக்ஸ் மொபைலில் ஜின்ஜர்பிரீட் வெர்ஷன் வி2.3 வசதியை அப்கிரேட் செய்ய முடியும். தன்டர்போல்ட் மாடலில் 5 எம்பி கேமரா மற்றும் 1.3 எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஏட்ரிக்ஸில் 5 எம்பி கேமராவும் மற்றும் விஜிஏ செகன்டரிக் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா விஷயத்தில் ஏட்ரிக்ஸ் மொபைலைவிடவும் தன்டர்போல்ட் சிறிது அதிக எம்பி கொண்டுள்ளது. தன்டர்போல்ட் போனில் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் பிராசஸர் மற்றும் ஜிபோர்ஸ் ஜிபியு பொருத்தப்பட்டுள்ளது. ஏட்ரிக்ஸ் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸர் மற்றும் அட்ரினோ ஜிபியு பொருத்தப்பட்டுள்ளது.

ஏட்ரிக்ஸ் 8-9 மணி நேரம் டாக் டைம் கொண்டது. எச்டிசி மொபைல் 7 மணி நேரம் டாக் டைம் வசதி கொண்டது. மோட்டோரோலாவின் ஏட்ரிக்ஸ் விலை ரூ.31,000 இருக்கும் என்றும், எச்டிசி தன்டர்போல்ட் மொபைலின் விலை ரூ.29,000 இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X