புதிய எச்டிசி ரைம் மற்றும் சென்செஷன் ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டு பார்வை

By Super
|
புதிய எச்டிசி ரைம் மற்றும் சென்செஷன் ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டு பார்வை
வரலாறுகளில் குறிப்பிடும் அளவிற்கு பல அசாத்திய படைப்புகளை அளித்திருக்கிறது எச்டிசி நிறுவனம். எச்டிசி ரைம் மற்றும் சென்சேஷன் எக்ஸ்எல் என்ற இரண்டு ஸ்மார்ட்மொபைல்களை வெளியிட்டுள்ளது எச்டிசி.

சிறப்பான தொழில் நுட்பங்களை கொடுக்கும் நிறுவனங்களை நினைக்கும் பொழுது மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருப்பதில்லை. அப்படி இருக்கையில், சிறந்த நிறுவனங்கள் தொடர்ந்து தறமான படைப்புகளை கொடு்த்துக் கொண்டே இருந்தால் அந்த சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது என்பது உண்மைதான். அதை நிரூபிக்க வந்துள்ளது புதிய ரைம் மற்றும் சென்சேஷன் எக்ஸ்எல் என்ற ஸ்மார்ட் மொபைல்கள்.

எச்டிசி ரைம் மொபைல் பெண்களை நிச்சயம் கவரும். இதன் வடிவமைப்பு பெண்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கிறது. இந்த மொபைல் ஆன்ட்ராய்டு 2.3.4 இயங்குதளத்தின் மூலம் இயங்குகிறது. எச்டிசி சென்சேஷன் மொபைலும் அதே போல் ஆன்ட்ராய்டு 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் தான் இயங்குகிறது.

இந்த இரண்டு மொபைல்களும் திரை வசதியைப் பொருத்த வரையில் சற்று வித்தியாசப்படுகிறது. எச்டிசி ரைம் 3.7 இஞ்ச் திரையையும் மற்றும் எச்டிசி சென்சேஷன் 4.7 இஞ்ச் திரையையும் கொண்டுள்ளது. எந்த விதமான கீறல்களும் ஏற்படாமல் இருக்க இதில் ரெசிஸ்டன்ஸ் கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மொபைல்களுமே மல்டி டச் திரை வசதியைப் பெற்றுள்ளது. 1,600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் ரைம் மற்றும் சென்சேஷன் ஸ்மார்ட்மொபைல்களில் பேட்டரி பற்றிய எந்த குறைபாடும் இருக்காது. இதனால் ரைம் மொபைல் 6.83 மணி நேரம் டாக் டைமையும், சென்சேஷன் எக்ஸ்எல் மொபைல் 11.83 மணி நேரம் டாக் டைம் வசதியையும் கொடுக்கிறது.

ரைம் மொபைல் 5 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளதால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற உதவும்.

எச்டிசி ரைம் மொபைலை ஒப்பிட்டுப் பார்க்கையில் சென்சேஷன் எக்ஸ்எல் மொபைலில் கேமரா வசதி கொஞ்சம் அதிகம் தான். இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு இதில் முகப்புக் கேமராவும் பொருத்துப்பட்டுள்ளதால், வீடியோ சாட்டிங் மற்றும் வீடியோ கான்ஃபிரன்ஸிங் வசதியையும் பெற முடியும்.

எச்டிசி ரைம் மொபைலைக் காட்டிலும் எச்டிசி சென்சேஷன் மொபைல் சற்று கூடுதல் வசதி கொண்டதாக உள்ளது. அதே போல் விலையிலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. எச்டிசி ரைம் மொபைல் ரூ.25,000 விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

எச்டிசி சென்சேஷன் மொபைல் ரூ.35,000 விலையை ஒட்டியதாக இருக்கும். இந்த இரண்டு மொபைல்களுமே வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதியை வழங்கும் மொபைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X