புதிய ஸ்மார்ட்மொபைல்களை வெளியிடும் பென்க்

இந்த திட்டத்திற்கும் முன்பே பென்க் நிறுவனம் புதிய ஸ்மார்ட் மொபைல்கள், டச் ஸ்கிரீன் மொபைல்கள் போன்றவற்றை வெளியிட்டிருக்கிறது. இதனால் மொபைல் படைப்புகளில் பென்க் நிறுவனத்திற்கு போதிய அனுபவமும் இருக்கிறது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் வளர்ச்சியை உணர முடியும்.
பென்க் நிறுவனம் மொபைல் தயாரிப்பில் உலகளவில் ஆறாவது நிறுவனம் என்பதை நிச்சயம் இங்கு சொல்லியே ஆகவேண்டும். இத்தகைய நிறுவனத்தின் மூலம் புதிய தொழில் நுட்பம் கொண்ட மொபைல்கள் இனி தயாரிக்கப்பட உள்ளது என்றால், இது வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இனிய செய்திதான்.
இந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான ராஜீவ் சிங் கூறுகையில், 3.7 இஞ்ச் திரை வசதி கொண்ட மொபைலை இந்திய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனென்றால் இந்திய சந்தையில் ஸ்மார்ட் மொபைல்களுக்கு அதிக எதிர் பார்ப்பு இருக்கிறது. இதனால் பென்க் தயாரித்து வெளியிட இருக்கும் ஸ்மார்ட் போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications