Home
Mobile

அட விலை இவ்ளோ தானா! மே 21 முதல் ஆர்டர் பொளக்க போகுது.. 24GB ரேம், 108MP கேமரா, IP54 ரேட்டிங், 5000mAh பேட்டரி!

24ஜிபி வரையிலான ரேம், 108எம்பி மெயின் கேமரா, ஐபி54 ரேட்டிங், 5000எம்ஏஎச் பேட்டரி உட்பட பல "முரட்டுத்தனமான" அல்லது "ப்ரீமியம்" அம்சங்களை கொண்டுள்ள ஒரு ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் இவ்வளவு தானா? என்று நீங்கள் ஷாக்கானால் அதில் ஆச்சரிப்பட ஒன்றுமே இல்லை!

நாம் இங்கே பேசுவது ஏற்கனவே சவுதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட, வருகிற மே 21 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ (Infinix GT 20 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

அட விலை இவ்ளோ தானா! மே 21 முதல் ஆர்டர் பொளக்க போகுது!

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோவின் விரிவான அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சவுதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், இது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பதில் எங்களுக்கு எந்த குழப்பமுமில்லை. சவுதி அரேபியாவில் அறிமுகமான அதே வேரியண்ட் தான், இந்திய சந்தைக்கும் வரும்

அப்படியாக இது டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் மற்றும் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 14 கொண்டு இயங்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட், 1,300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் சிப்செட் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான LPDDR5X ரேம் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். மேலும் பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி, கிடைக்கக்கூடிய ரேமை கிட்டத்தட்ட 24ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவையும் கொண்டிருக்கும். கூடவே இது ஒரு பிரத்யேக பிக்சல்வொர்க்ஸ் எக்ஸ்5 டர்போ கேமிங் சிப்பையும் உள்ளடக்கி இருக்கும். இது கேமிங் பிரேம் வீதங்களை 120fps வரை உயர்த்துவதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எல்இடி இன்டர்பேஸ் உடன் கூடிய மெச்சா டிசைனும் உள்ளது. இது ஆர்ஜிபி மினி-எல்இடி சீரீஸின் கீழ் எட்டு கலர்கள் மற்றும் நான்கு லைட்டிங் எபெக்ட்களை காட்சிப்படுத்தும். இந்த லைட் செட்டப் ஆனது இன்கம்மிங் கால்கள், அறிவிப்புகள் மற்றும் சார்ஜிங் போன்ற பல்வேறு செயல்களின் போது ஒளிரும்; மேலும் இதை கஸ்டமைஸும் செய்யலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு உடனான 108 மெகாபிக்சல் சாம்சங் HM6 சென்சார் மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பில் டூயல் 2 மெகாபிக்சல் சென்சார்களும் அடங்கும். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்யும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, 256ஜிபி யுஎஃப்எஸ் ஸ்டோரேஜ், யூஎஸ்பி டைப்-சி, லைட் சென்சார், இ-காம்பஸ், ஜி-சென்சார், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார், ஐபி54 ரேட்டிங் மற்றும் ஜேபிஎல் வார்டு டூயல் ஸ்பீக்கர்களையும் கொண்டிருக்கும்.

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? ஆரம்பத்தில் இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் சவுதி அரேபியாவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.28,800 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மே 1 ஆம் தேதி முதல் மெக்கா ப்ளூ, மெக்கா ஆரஞ்சு மற்றும் மெக்கா சில்வர் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனையையும் தொடங்கியது.

ஆக இந்தியாவிலும் இது 3 கலர் ஆப்ஷன்களில் ரூ.30,000 குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.25,000 க்குள் தான் இருக்கும் என்பதை இன்பினிக்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. முன்னரே குறிப்பிட்டப்படி, இது மே 21 இல் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
24GB RAM 108MP Camera IP54 Rating 5000mAh Battery Infinix GT 20 Pro price in India Under Rs 25000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X