ஸென் ஏ-60 மற்றும் ஸ்பைஸ் க்யூடி-53 - ஒர் ஒப்பீடு

By Super
|

ஸென் ஏ-60 மற்றும் ஸ்பைஸ் க்யூடி-53 - ஒர் ஒப்பீடு
ஸென் எ60 மற்றும் ஸ்பைஸ் க்யுடி53 ஆகிய இரண்டு டூவல் சிம் மொபைல்கள் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.

ஸென் எ60 ஒரு அழகிய டூவல் சிம் ஜிஎஸ்எம் மொபைலாகும். அது 2.4 இன்ச் வண்ண டிஸ்ப்ளேயை பெற்று வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருக்கிறது.

அதே நேரத்தில் அது க்யுடி53 என்ற புதிய மொபைலுடன் போட்டிபோட வேண்டியிருக்கிறது. க்யுடி53 க்யுவெர்டி கீபோடைக் கொண்டிருக்கிறது.

இதனுடைய டிஎப்டி திரையின் டிஸ்ப்ளே 2 இன்ச் கொண்டு 176 X 220 பிக்ஸல் ரிசலூசனைப் பெற்றிருக்கிறது.

மேலும் இது ரிக்கார்டிங் வசதியுடன் எப்எம் ரேடியாவையும் வழங்குகிறது.

இதன் மெமரி 8ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடியதாகும். இதன் வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர்கள் எல்லா பைல்களையும் சப்போர்ட் செய்கின்றன.

மறுபக்கம் ஸென் எ60 எப்எம் வசதியுடன் 3ஜி நெட்வொர்க் சப்போர்ட்டையும் பெற்றிருக்கிறது.

மேலும் இது 3.2 மெகா பிக்ஸல் ரியர் கேமராவையும் விஜிஎ முகப்பு கேமராவையும் பெற்றிருப்பதால் வீடியோ காலிங் செய்வது மிக எளிதாக இருக்கும்.

மேலும் இது வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர்களையும் பெற்றிருக்கிறது. இது மைக்ரோஎஸ்டி கார்ட் வழியாக 16ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 78எம்பி இன்டர்னல் மெமரியையும் கொண்டுள்ளது.

தொடர்பு வசதிகளை எடுத்துக் கொண்டால் ஸென் எ60 3ஜி சப்போர்ட்டுக்கான ப்ளூடூத் வசதியை பெற்றிருக்கிறது. அதேபோல் டபுள்யுபியுடன் கூடிய ஜிபிஆர் வசதிகளையும் பெற்றிருக்கிறது. மேலும் சோஷியல் நெட்வெர்க்கிற்கு வசதியாக பேஸ்புக், டவிட்டர், ஜிடாக் மற்றும் ஸ்கைப் அப்ளிகேஷன்களையும் கொண்டிருக்கிறது.

ஸ்பைஸ் க்யுடி53ஐ எடுத்துக்கொண்டால் ப்ளூடுத் மற்றும் டபுள்யு/ ஜிபிஆர்எஸ் போன்ற வசதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. மேலும் யுஎஸ்பி போர்ட்டையும் கொண்டுள்ளது. இதன் மின்திறனை பார்த்தால் இது 800எம்எஹச் லை-யன் பேட்டரியை பெற்றிருக்கிறது.

எனவே தொடர்ந்து 7.5 மணி நேரம் பேசக்கூடிய பேட்டரி பேக்கப்பையும் மற்றும் 360 மணி நேர ஸ்டான்டர்டு பேக்கப்பையும் பெற்றிருக்கிறது. இதனுடைய எடை 94 கிராம்களாக இருக்கும். இந்த இரண்டு மொபைல்களின் விலைகள் அறிவிக்கப்படவில்லையென்றாலும் ஸென் எ60 ரூ. 3100க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X