Home
Mobile

புதிய மியூசிக் மொபைல்களை களமிறக்கியது ஸ்பைஸ்

By Super
புதிய மியூசிக் மொபைல்களை களமிறக்கியது ஸ்பைஸ்
வருடத்தின் கடைசியை கொண்டாட முடிவெடுத்துவிட்டது போலும் ஸ்பைஸ் நிறுவனம். இந்த கொண்டாட்டத்தின் பயனாக வாடிக்கையாளர்களுக்கு புதிய இரண்டு தொழில் நுட்பங்கள் கிடைக்க இருக்கிறது.

ஸ்பைஸ் சம்பா மற்றும் ஸ்பைஸ் கார்னிவல் என்ற இரண்டு புதிய மியூசிக் மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஸ்பைஸ் நிறுவனம்.

இந்த இரண்டு படைப்புகளுமே வாடிக்கையாளர்களை பெருமிதம் கொள்ள வைக்கும். இது போன்ற படைப்புகள் நவீனத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது என்று தான் கூற வேண்டும்.

ஸ்பைஸ் சம்பா என்ற மொபைல் எம்-5560 என்ற இன்னொரு பெயரையும் கொண்டுள்ளது. இந்த மொபைல்கள் முக்கியமாக இசை விரும்பிகளுக்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பாடல்கள் கேட்டு மகிழலாம். இந்த போன் கிரேயிஷ் ப்ளாக் மற்றும் மிட் நைட் புளூ போன்ற வண்ணங்களில் வெளிவர உள்ளது. மொபைலின் வண்ணத்தில்தான் புதுமை என்றால், அந்த வண்ணத்திற்கு வைத்திருக்கும் பெயரும் கூட கேட்பதற்கு சற்று பிரம்மிப்பை அளிக்கிறது.

இந்த வகை நிறங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் மயங்கச் செய்துவிடும். ஸ்பைஸ் கார்னிவல் மொபைலும் இதே நிறத்தில் கிடைக்கும்.

ஸ்பைஸ் சம்பா மொபைல் கியூவிஜிஏ 2.2 இஞ்ச் திரை கொண்டள்ளதால் முழுமையான திரையை வழங்கும். எதிலும் முழுமைத்தன்மையைக் கொடுக்கும் ஸ்பைஸ் நிறுவனம் திரை விஷயத்திலும் அதை நிரூபித்திருக்கிறது. ஸ்பைஸ் கார்னிவல் மொபைல் 2.2 இஞ்ச் அகன்ற கியூவிஜிஏ திரை நுட்பத்தையும் கொடுக்கிறது.

கீப்பேட் விஷயத்திலும் கூட வாடிக்கையாளர்களுக்கு வசதியைக் கொடுக்கிறது இந்த ஸ்பைஸ் கார்னிவல் மொபைல்போன். ஆம்! இது கியூவர்டி கீப்பேட் சவுகரியத்தை அளிக்கிறது. இதனால் கம்ப்யூட்டரில் டைப் செய்வது போலவே ஒரு உணர்வைக் கொடுக்கும்.

இரண்டு மொபைல்களுமே மல்டி ஃபார்மெட்டான ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு துணைபுரிகிறது. ஸ்பைஸ் கார்னிவல் மொபைலில் சற்று கூடுதலாக உயர்ந்த தொழஇல் நுட்பம் கொண்ட சவுந்டு ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு போன்களிலுமே 2ஜிபி வரை மைக்ரோஎஸ்டி, 8ஜிபி ஃப்ளாஷ் எக்ஸ்டர்னல் மெமரி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ் சம்பா, ஸ்பைஸ் கார்னிவல் மொபைல்கள் புளூடூத், யூஎஸ்பி, டபிள்யூஏபி கனக்டிவிட்டி போன்று ஏராளமான வசதிகளை கொடுக்க இருக்கிறது. இந்த இரண்டு மொபைல்போன்களுமே ரூ.3,600 விலையில் இந்திய சந்தையில் கிடைக்கும்.

தொடர்பு கொள்வதற்காக மொபைல்போன் என்பது போய், பல அரிய தொழில் நுட்பங்களை எளிய வகையில் பெருவதற்காக மொபைல் என்றாகிவிட்டது. புதிய புதிய தொழில் நுட்பங்களை ஸ்பைஸ் நிறுவனத்தின் இந்த இரண்டு மியூசிக் மொபைல்களிலும் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X