Home
Mobile

தொடுதிரை வசதியுடன் வரும் புதிய சாம்சங் போன்

By Super
தொடுதிரை வசதியுடன் வரும் புதிய சாம்சங் போன்
மொபைல் தொழில் நுட்பத்தில் சாம்சங் நிறுவனம் தனக்கென்று ஒரு தனித்துவத்தை உண்டாக்கிக் கொண்டு எப்பொழுதும் முன்னிலை வகிக்கிறது.

பிடித்து வைத்திருக்கின்ற சிறப்பான இடத்தை விடுவதற்கு தயாராக இல்லை என்பதை ஒவ்வொரு மொபைலின் படைப்பிலும் வெளிப்படுத்துகிறது. எஸ்எச்-டி528 என்ற பெயரில் புதிய மொபைலை வெளியிட இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

இந்த மொபைல் 3 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையுடன் வாடிக்கையாளர்களின் கைகளில் கிடைக்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது.

இதனால் நண்பர்கள், உறவினர் போன்றவர்களுடன் செலவிடப்படும் ஒவ்வொரு பொன்னான தருனங்களையும் மனதில் மட்டும் அல்ல, இதில் உள்ள கேமராவின் மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்கலாம்.

வீடியோ ரெக்கார்டிங் செய்ய விருப்பப்பட்டால் அதையும் எளிதாக செய்யலாம். எஸ்எச்-டி528 மொபைல் 2.0 டச்விஸ் வசதியும் உள்ளது.

இதன் வைபை வசதியின் மூலம் நெட்வொர்க் தொடர்பைப் பெறலாம். நெட் வசதிக்காக அருகாமையில் உள்ள பிரவுசிங் சென்டர்களைத் தேடி ஒட வேண்டிய அவசியம் இல்லை. பயணங்களில் கூட எளிதாக கையில் வைத்துக் கொண்டு நெட்டில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

என்னதான் நெட் வசதியிருந்தாலும் அதை தொடர்ந்து பயன்படுத்த பேட்டரியும் தேவை. இதில் உள்ள 1,000 எம்ஏஎச் பேட்டரி பேக்கப் 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 250 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கும். யூஎஸ்பி வசதி உள்ளதால் எளிதாகப் பதிவேற்றம் செய்யலாம்.

புளூடூத் சவுகரியத்தையும் இந்த மொபைலில் பெறலாம். சாம்சங் டி528ஜி மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் 3ஜி வசதி, எந்த ஒரு ஃபைலையும் எளிதாக டவுன்லோட் அல்லது அப்லோட் செய்ய உதவும்.

மைக்ரோஎம்எஸ்டி வசதி மெமரி சவுகரியத்திற்கு சப்போர்ட் செய்யும். சாம்சங் டி528ஜி மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த மொபைலின் மூலம் நிறைய அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்யது பயன்பெற முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X