Home
Mobile

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்

By Super
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்
மொபைல் சந்தைய நித்தமும் பல மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. சிறந்த நிபுணர்கள் மூலம் உயர்ந்த தொழில் நுட்பத்தை வழங்கும் சாம்சங் நிறுவனம், சாம்சங் எஸ்எச்வி-இ-120எல் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இது 4.7 இஞ்ச் கலர் கெப்பாசிட்டிவ் மல்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. இதில் 4.7 இஞ்ச் எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 1280 x 720 பிக்ஸல் ரிசல்யூஷன் வசதியும் இதில் உள்ளது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரும், எம்எஸ்எம்8660/எம்டிஎம்9600 சிப்செட்டும் இதனுடன் பொருத்தப்பட்டுள்ளது.

கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3.5 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினால் இயங்குகிறது என்றும் மற்றும் இதில் ஐஸ்கிரீம் சான்விட்ஜ் ஆன்ட்ராய்டு வசதியை அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்று பல தகவல்கள் கூறுகிறது. ஆனால் இது போன்ற தகவல்கள் இன்னும் முடிவாகவில்லை.

16 ஜிபி இன்டர்னல் மெமரியுடன், வேகமான முறையில் தகவல்களைப் பெறுவதற்கு ரேம் வசதியும் இதில் உள்ளது. இந்த ஹேண்செட் மைக்ரோ எஸ்டி மற்றும் மைக்ரோ எஸ்டிஎச்சி மெமரி கார்டு வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மெமரியை 32 வரை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

இதன் மூலம் எல்டிஇ ரேடியோவைக் கேட்டு மகிழலாம். இதில் பிரைமரி மற்றும் செகன்டரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 1080பி ஹைய்-டெஃபனிஷன் வீடியோவிற்கு உதவுகிறது இதன் 8 மெகா பிக்ஸல் கேமரா. இது டியூவல் லெட் ப்ளாஷ் வசதி கொண்டது. 1920 X 1080 பிக்ஸல் ரிசல்யூஷன் கொண்டது. வீடியோ கான்பிரன்ஸிங்கிற்கு உதவ இதில் 2 மெகா பிக்ஸல் செகன்டரி கேமரா உள்ளது.

இந்த ஜிஎஸ்எம் மொபைல் 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்யும். வாடிக்கையாளர்கள் இதன் ஏ2டிபி புளூடூத், ஜிபிஎஸ், வைபை போன்ற வசதிகள் மூலம் சிறந்த பயனை அடையலாம். 1850 எல்ஐ-பிஒ பேட்டரி இதில் உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதனுடைய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X