Home
Mobile

பிளிப்கார்ட் அதிரடி ஆஃபர்.. சோனி கேமரா.. 44W சார்ஜிங்.. குறைந்த விலையில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் விவோ வி30இ (vivo V30e) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், 5500mAh பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ 30இ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் விவோ வி30இ ஸ்மார்டபோனுக்கு 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.26,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் அதிரடி ஆஃபர்.. குறைந்த விலையில் Vivo 5ஜி போன்..

விவோ வி30இ அம்சங்கள் (vivo V30e specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ வி30இ போன் வெளிவந்துள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30இ போன். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ வி30இ மாடல்.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்(Snapdragon 6 Gen 1 chipset) வசதியைக் கொண்டு விவோ வி30இ போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த விவோ போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த புதிய விவோ வி30இ போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி eye AF செல்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.

பிளிப்கார்ட் அதிரடி ஆஃபர்.. குறைந்த விலையில் Vivo 5ஜி போன்..

அதேபோல் விவோ வி30இ போனில் 5500mAh பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது.

விவோ வி30இ 5ஜி போனில் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது. புளூடூத் 5.1, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30இ 5ஜி போன். வெல்வெட் ரெட் (Velvet Red) மற்றும் சில்க் ப்ளூ (Silk Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
24 percent discount on Vivo V30e phone in flipkart big diwali sale: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X