விட்டா போச்சு.. ரூ.16,000 டிஸ்கவுண்ட்.. ரூ.38,999 போதும்.. பிரீமியம் ஃபிளிப் போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே அதிரும்படி முதல்முறையாக வெறும் ரூ.38,999 பட்ஜெட்டில் டூயல் அமோலெட் டிஸ்பிளே, 45W சார்ஜிங், 4000mAh பேட்டரி, 64எம்பி கேமரா போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் (ECNO PHANTOM V Flip) தள்ளுபடியில் கிடைக்கிறது.
டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் அம்சங்கள் (TECNO PHANTOM V Flip Specifications): இந்த டெக்னோவில் 6.9 இன்ச் (1080 × 2640 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அவுட்டர் டிஸ்பிளேவானது, 1.32 இன்ச் (360 x 360 பிக்சல்கள்) கொண்டிருக்கிறது.

இதுவொரு 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் மாடலாகும். இந்த டெக்னோ ஃபிளிப் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 8050 6nm) சிப்செட் வருகிறது. ஆர்ம் ஜி77 எம்சி9 ஜிபியு (ARM G77 MC9 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
ஹைஓஎஸ் 13.5 (HiOS 13.5) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் கொண்டுள்ளது. 64 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் சிஸ்டம் (Dual System) வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) சப்போர்ட் வருகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 4000mAh பேட்டரி வருகிறது.
டைப்-சி (Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பேட்டரியோடு 172 கிராம் எடை கொண்டுள்ளது. அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 6.95 மிமீ தடிமன் வருகிறது. இந்த டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் போனானது, 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் உள்ளது.

அதேபோல கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 6 (Wi-Fi 6), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிவை வருகின்றன. இந்த டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் மாடலில் மிஸ்டிக் டவுன் (Mystic Dawn) மற்றும் ஐகானிக் பிளாக் (Iconic Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.
இவ்வளவு அல்ட்ரா பிரீமியம் அம்சங்களை கொண்டிருந்தும், இந்த போனின் விலை ரூ.54,999ஆக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. இது மற்ற ஃபிளிப் போன்களை ஒப்பிடுகையில் கம்மி பட்ஜெட்டாகும். ஆகவே, இந்த போனின் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது. இந்த விற்பனையானது, மேலும் சூடு பிடிக்கும் விதமாக, அமேசான் (Amazon) தளத்தில் நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
முழுதாக ரூ.16,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதற்கு எந்தவொரு பேங்க் கார்டுகளும் தேவையில்லை. அதோடு ரூ.50,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.38,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் அல்ட்ரா பிரீமியம் ஃபிளிப் போன் கிடைப்பது முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications