தெறிக்கும் ஆஃபர்.. ரூ.15,000 பட்ஜெட்ல சாம்சங் மாடல்.. AMOLED டிஸ்பிளே.. 1TB மெமரி.. 6000mAh பேட்டரி!
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது, முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நேரத்தில் சாம்சங் பிரியர்களை அறக்க பறக்க வைக்கும் வகையில், சாம்சங் கேலக்ஸி எம்34 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்14 போன்களுக்கு பக்காவான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
சாம்சங் கேலக்ஸி எம்34 அம்சங்கள் (Samsung Galaxy M34 Specifications): இந்த போனில் 6.5 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13 OS) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1280 5என்எம் (Octa Core Exynos 1280 5nm) சிப்செட் வருகிறது.

இந்த சாம்சங் மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. சைடு-மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் வருகிறது.
இந்த போனில் மிட்நைட் ப்ளூ, ப்ரிசம் சில்வர் மற்றும் வாட்டர்ஃபால் ப்ளூ ஆகிய மூன்று கலர்கள் இருக்கின்றன. இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.16,548ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.15,048க்கு வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்14 அம்சங்கள் (Samsung Galaxy M14 Specification): இந்த சாம்சங் போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 5என்எம் (Octa Core Exynos 1330 5nm) சிப்செட் கொண்டுள்ளது. இதில் 6.6 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே வருகிறது.
இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன. அதோடு 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது.
இந்த மாடலில் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல 13 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த சாம்சங் போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கொண்டுள்ளது.

இந்த போன் பெர்ரி ப்ளூ, ஸ்மோக் டீல் மற்றும் ஐசி சில்வர் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் போனின் 4 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,490ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அமேசான் விற்பனையில் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.11,539 க்கு வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications