Home
Mobile

யாரு விடுவா? டிஸ்கவுண்ட்டில் ரூ.16,249க்கு சாம்சங் 5G போன்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) தளமே அறக்க பறக்கும் விதமாக சாம்சங் கேலக்ஸி எம் 34 (Samsung Galaxy M34) போனுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் வெறும் ரூ.16,249க்கு விற்பனைக்கு கிடைக்கிறது. எப்படி டிஸ்கவுண்ட் பெறலாம்? போனின் அம்சங்கள் என்ன? விவரம் இதோ.

சாம்சங் கேலக்ஸி எம் 34 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M34 Specifications): இந்த சாம்சங் போன், 6.5 இன்ச் (1080×2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவொரு இன்பினிட்டி (Infinity-U) மாடலாகும். இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரூ.16249க்கு சாம்சங் போன்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?

இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சாமசங் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஒன் யுஐ 5.1 (One UI 5.1) கொண்ட ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 5என்எம் (Octa-Core Exynos 1280 5nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி68 ஜிபியு (Mali G68) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும், 1 டிபி வரை மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டூயல் நனோ சிம் சிலாட்டுடன் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 மாடலானது, ரியர் கேமரா டிரிபிள் சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும். அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் பனோரமா மற்றும் எச்டிஆர் சப்போர்ட் வருகிறது.

அதோடு 4K தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ள முடியும். அதேபோல 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டைப் - சி ஆடியோ (Type-C Audio) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது.

இந்த போனின் கனெக்விட்டி அம்சங்களை பார்க்கையில், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual-Frequency GPS), வை-பை 6 (Wi-Fi 6), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் 5ஜி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போன் மிட்நைட் ப்ளூ ( Midnight Blue), ப்ரிஸம் சில்வர் (Prism Silver) மற்றும் வாட்டர்ஃபால் ப்ளூ (Waterfall Blue) ஆகிய கலர்களில் வருகிறது.

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் அதிரடி டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த போனை எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால், உங்களுக்கு ரூ.2,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதில் ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1250 இஎம்ஐ ஆப்சன்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.16,249க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
24 Percent Discount on Samsung Galaxy M34 5G in Amazon Check Specifications Price Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X