ஆஃபருக்கு மேல ஆர்டர்.. ரூ.17,499க்கு சாம்சங் போன்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1 டிபி மெமரி.. எந்த மாடல்?
பட்ஜெட் விலையில் OIS கேமரா, மாலி கிராபிக்ஸ் கார்டு, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 1டிபி மெமரி சப்போர்ட் போன்ற பக்காவான அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்34 (Samsung Galaxy M34) போனுக்கு அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆர்டர் குவிந்துவருகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்34 அம்சங்கள் (Samsung Galaxy M34 Specifications): இந்த சாம்சங் கேலக்ஸி மாடல் 6.5 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு இன்பினிட்டி-யூ எச்டிஆர் (Infinity-U HDR) மாடல் டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது.

இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 5.1 ஓஎஸ் (Samsung One UI 5.1 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1280 5என்எம் (Octa Core Exynos 1280 5nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு மாலி - ஜி68 ஜிபியு (Mali-G68 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும். அதேபோல 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. சைடு-மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor) வருகிறது. அதேபோல டைப் - சி ஆடியோ (Type-C audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 801 (Wi-Fi 802), டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual Frequency GPS) மற்றும் என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போன் மிட்நைட் ப்ளூ (Midnight Blue), பிரிசம் சில்வர் (Prism Silver) மற்றும் வாட்டர்ஃபால் ப்ளூ (Waterfall Blue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போன் ஜூலை 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலையில், இப்போது அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1500 உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடியை பெற எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், ரூ.12,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.18,999 மதிப்புள்ள 6ஜிபி ரேம் மாடலை வெறும் ரூ.17,499க்கு வாங்கிக்கொள்ள முடியும். பக்காவான கேமரா, பெரிய பேட்டரி, நல்ல சிப்செட் கொண்ட சாம்சங் மாடல் வேண்டுமென்றால், இந்த போன் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








