யோசிக்காம வாங்குவீங்க.. வெறும் ரூ.14,498 போதும்.. OLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
மோட்டோஸ்போர்ட்ஸ் டிசைன் மட்டுமல்லாமல், அதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட், 90FPS கேமிங் அவுட்புட், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விசி கூலிங் சிஸ்டம், ஈஸ்போர்ட்ஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கும் ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme NARZO 70 Turbo 5G) போன் இப்போது அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. ரூ.17,999 பட்ஜெட்டில் வெளியான இந்த போன் டிஸ்கவுண்ட் போக ரூ.14,000 பட்ஜெட்டில் வாங்க முடியும்.
பட்ஜெட் விலை கேமிங் மாடலாக ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி இந்திய மார்கெட்டில் வெளியாகியது. இதுபோக IP65 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டனட், ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்காத பீச்சர்கள் கிடைத்ததால் கூடுதல் வரவேற்பை பெற்றது.

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி அம்சங்கள் (Realme NARZO 70 Turbo 5G Specifications): இந்த நார்சோ போனில் 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஓஎல்இடி ஈஸ்போர்ட்ஸ் (OLED Esports) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 90FPS கேமிங் அவுட்புட் மற்றும் 1200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
இதுபோக ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 2000 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் அவுட்புட் பட்ஜெட்டைவிட கூடுதலாக கிடைக்கும். இதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் 7300 எனர்ஜி எஸ்ஓசி (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Energy SoC) சிப்செட் பேக் செய்துள்ளது.
மேலும், ரியல்மி யுஐ 5 (realme UI 5), ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் இந்த பட்ஜெட்டுக்கு ஏற்றபடி மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலும் கிடைக்கிறது.
இந்த டாப்-எண்ட் மாடலில் 14 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) ரேம் கிடைக்கிறது. ஆகவே, 28 ஜிபிக்கான ரேம் அவுட்புட் பெற்று கொள்ளலாம். இதுபோக ஏஐ பூஸ்ட் 2.0 (AI BOOST 2.0), ஜிடி மோட் (GT Mode), வேப்பர் கூலிங் ஏரியா (VAPOR COOLING AREA) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட சிஸ்டம் கிடைக்கிறது.
இந்த ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி போனில் 45W சார்ஜிங் + 5000mAh பேட்டரி வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் தளத்தில் ரூ.15,998 பட்ஜெட்டில் வருகிறது. இதுபோக ரூ.1,500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, எந்த கார்டுகளும் இல்லாமல், ரூ.14,498 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








