Home
Mobile

தூள் கிளப்பும் அமேசான்.. 64MP கேமரா.. 67W சார்ஜிங்.. ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் போக்கோ எக்ஸ்6 5ஜி (Poco X6 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் தரமான போக்கோ எக்ஸ்6 5ஜி போனுக்கு 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.17,999 இருந்தால் வாங்கிவிட முடியும்.

தூள் கிளப்பும் அமேசான்..ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எக்ஸ்6 5ஜி அம்சங்கள் (Poco X6 5G specifications): 6.67-இன்ச் 1.5கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 1220 x 2712 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், டால்பி விஷன், 66 பில்லியன் பிளஸ் கலர்ஸ் உள்ளிட்ட தனித்துவமான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட்(Snapdragon 7s Gen 2 SoC) வசதியுடன் இந்த அசத்தலான போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) உடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போனுக்குஇ மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (in-display fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

ஓஐஎஸ் (OIS) ஆதரவு கொண்ட 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது.

தூள் கிளப்பும் அமேசான்..ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

5100mAh பேட்டரி உடன் இந்த போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ 5ஜி போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
24 Percent Discount on Poco X6 5G With 64MP camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X