ஆளுக்கொரு 1 ஆர்டர் விழுது.. ரூ.12,999 பட்ஜெட்ல 12GB ரேம்.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரூ.15,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம், 120Hz டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் வேண்டுமானால், பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி (OPPO A5x 5G) ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மலிவு விலைக்கு கிடைக்கும் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இருக்கும் இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டானது, பிளிப்கார்ட் தளத்தில் 24 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.13,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. கூடுதலாக ரூ.1,000 பேங்க் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ரூ.12,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த பேங்க் தள்ளுபடி எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. பேட்டரி மட்டுமல்லாமல், டியூரபிலிட்டியில் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.
மேலும், IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. ஆகவே, 360 டிகிரி ஆர்மர் பாடி கிடைக்கும். இந்த டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் லேசர் ஒயிட் ( Laser White) ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கிறது. டிஸ்பிளே, கேமரா, சிப்செட் போன்ற பீச்சர்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கின்றன.
ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A5x 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்படுகிறது. 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் (6GB Virtual RAM) கிடைக்கிறது.
கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்க மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. மேலும், டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
கேமராவில் மட்டும் பெரிதாக எதிர்பார்க்க முடியவில்லை. ஏனென்றால், 32 எம்பி மெயின் கேமரா மட்டுமே கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆனால், பேட்டரியில் குறை சொல்ல சொல்ல முடியாது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் இது அதிக கேபாசிட்டியாகவே இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
இந்த பேட்டரியுடன் 7.99 எம்எம் தடிமன் வருகிறது. 193 கிராம் எடை கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ரெப்ளெக்சன் ரீமூவர் (AI Reflection Remover) மற்றும் ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸ் (AI Clarity Enhance) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 5ஜி என்ஏ/என்எஸ்ஏ (5G NA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








