Home
Mobile

SALE பிச்சிக்குது.. 24 சதவீத ஆஃபரில் 6.99 மிமீ போன்.. 5200mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. வெறும் 6.99 எம்எம் தடிமனில் 5200mAh பேட்டரி கொடுக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை இது கொடுத்துள்ளது.

இப்போது, அமேசான் தளத்தில் 24 சதவீத தள்ளுபடி போக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.56,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,709 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், ரூ.43,150 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது.

SALE பிச்சிக்குது.. 24 சதவீத ஆஃபரில் 6.99 மிமீ போன்.. 5200mAh பேட்டரி!

மோட்டோரோலா சிக்னேச்சர் அம்சங்கள் (Motorola Signature Specifications): அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 6.8 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது.

1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

சோனி எல்ஒய்டி 828 (Sony LYT 828) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியுடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

3எக்ஸ் சென்சார் ஜூம் மற்றும் 100எக்ஸ் சூப்பர் ஜூம் கொடுத்துள்ளது. மேலும், 8K மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. டால்பி விஷன் ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி எல்ஒய்டி 500 (Sony LYT 500) சென்சாருடன் 50 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பிரீமியம் பேட்டரி பீச்சர்கள் கிடைக்கின்றன.

ஆகவே, 90W டர்போபவர் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 50W டர்போபவர் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் வெறும் 6.99 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. மேலும், 186 கிராம் எடை கொடுத்துள்ளது. ஆகவே, ஸ்லிம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos), போஸ் (Bose) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. IP68 ரேட்டிங் மற்றும் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட்டை இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. MIL-STD 810H மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
24 Percent Discount on Motorola Signature With 12GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X