Home
Mobile

பொளந்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.5,699 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 2TB மெமரி.. IPS டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ஐடெல் ஜெனோ 20 (itel Zeno 20) ஸ்மார்ட்போனுக்கு கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ரூ.6,000 பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு 5000mAh பேட்டரி, ஐபிஎஸ் டிஸ்பிளே, IP54 ரேட்டிங் ரெசிஸ்டன்ஸ் கொடுத்தது. இப்போது, மேலும் அடிமட்ட விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஆக்டா கோர் டி7100 சிப்செட் கொண்ட இந்த ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் 3 ஜிபி ரேம் (5 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.5,999ஆகவும், 4 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.6,899ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.250 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.50 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

பொளந்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.5,699 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி!

ஆகவே, ரூ.300 டிஸ்கவுண்ட் போக ரூ.5,699 பட்ஜெட்டில் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த கூப்பன் டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு எந்தவொரு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டியது கிடையாது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஆனால், டிசைன் பிரீமியம் லுக் கொடுக்கிறது. கிளிட்டரிங் லுக் கொடுக்கும் அரோரா ப்ளூ (Aurora Blue), ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black) மற்றும் ஸ்பேஸ் டைட்டானியம் (Space Titanium) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஆன்டி-டிராப் கேஸ் புரொடெக்சன் (Anti-drop Case Protection) மற்றும் ப்ளாவ்லெஸ் டச் (Flawless Touch) கொடுக்கிறது.

ஆகவே, இந்த ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் வாட்டர் மற்றும் ஆல் டச் கன்ட்ரோல் கிடைக்கும். இதற்கு ஏற்ப IP54 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் & டஸ்ட் புரொடெக்சன் (Splash & Dust Protection) கிடைக்கிறது. ஜிபிடி ஏஐ (GPT AI) ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டன்ட் கொடுக்கிறது. இப்போது, டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட் போன்ற மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஐடெல் ஜெனோ 20 அம்சங்கள் (itel Zeno 20 Specifications): இந்த ஐடெல் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி7100 (Octa Core UNISOC T7100) சிப்செட் கிடைக்கிறது. 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், 270 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும். அதேபோல சிப்செட் பர்ஃபாமென்ஸ் மீடியமாக இருக்கும். இந்த ஐடெல் ஜெனோ 20 ஸ்மார்ட்போனில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W சார்ஜர் கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டைப்-சி சார்ஜிங், டூயல் சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
24 Percent Discount on itel Zeno 20 With 3GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X