Home
Mobile

Google போட்ட போடு.. கிடைக்காத டிஸ்கவுண்ட்டில் பிக்சல்.. OLED டிஸ்பிளே.. 64MP கேமரா.. எந்த மாடல்?

டிஸ்கவுண்ட் கிடைக்கலாம், அதுக்குனு இப்படியா என்று கூகுள் பிக்சல் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. ரூ.52,999 பட்ஜெட்டில் வெளியான இந்த போன் இப்போது ரூ.37,999 விலைக்கு கிடைத்தால், ஆர்டர் பட்டையை கிளப்பாமலா இருக்கும். இந்த கூகுள் பிக்சல் போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளவோம்.

கூகுள் பிக்சல் 8ஏ அம்சங்கள் (Google Pixel 8a Specifications): இந்த பிக்சல் போனில் 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. பிக்சல் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்கும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் கொண்ட கூகுள் டென்சார் ஜி3 (Google Tensor G3) சிப்செட் கிடைக்கிறது.

Google போட்ட போடு.. கிடைக்காத டிஸ்கவுண்ட்டில் பிக்சல்.. OLED டிஸ்பிளே!

டிஸ்பிளே பீச்சர்களை சும்மா சொல்லிவிட முடியாது, பட்டையை கிளப்பி இருக்கின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொண்ட 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எச்டிஆர் (HDR) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும்.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட் கிடைக்கிறது. 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

மெயின் கேமராவில் குவாட் பயர் (Quad Bayer) சென்சாரும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜியும் கிடைக்கிறது. பேஸ்-டிடெக்சன் ஆட்டோ போகஸ் (PDAF) மற்றும் 4K வீடியோ ஷூட்டர் சப்போர்ட் கிடைக்கிறது. இதே 4K வீடியோ ரெக்கார்டிங்குடன் 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்சுடன் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த கூகுள் பிக்சல் 8ஏ போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4492mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் டைப்-சி போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.9 மிமீ தடிமன் மற்றும் 188 கிராம் எடை வருகிறது. டிஸ்பிளே புரொடெக்சன் மட்டுமல்லாமல், IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) போலவே டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) பேக் செய்யப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் போன் அலோய் (Aloe), போர்ஸ்லைன் (Porcelain), அப்சிடியன் (Obsidian) மற்றும் பே (Bay) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்துகொள்ள கிடைக்கிறது.

இந்திய மார்கெட்டில் 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.52,999 பட்ஜெட்டில் வெளியானது. இருப்பினும், பிளிப்கார்ட் தளத்தில் இப்போது, வெறும் ரூ.39,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலையிலும் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.37,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
24 Percent Discount on Google Pixel 8a With 128GB Storage in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X