மலிவு விலையில் ஒரு கிவெர்ட்டி கீப்பேட் போன்: மைக்ரோமேக்ஸ் அறிமுகம்

Posted By: Staff

மலிவு விலையில் ஒரு கிவெர்ட்டி கீப்பேட் போன்: மைக்ரோமேக்ஸ் அறிமுகம்
ஆச்சர்யத்தில் திணறடிக்கும் வகையில் கியூ-1சி என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

குறைந்த விலையல்ல, மிகக் குறைந்த விலையில் கியூவர்டி கீப்பேட் வசதி கொண்ட இந்த மொபைலை விரைவில் விற்பனைக்கு வருகிறது மைக்ரோமேக்ஸ்.

அதுவும் மூன்று வித்தியாசமான வண்ணங்கள் கொண்டது. விலை குறைவு தான் ஆனால் அதற்காக எந்த வசதியும் குறைவல்ல.

இந்த மைக்ரோமேக்ஸ் கியூ-1சி மொபைல் மார்டன் டிஎப்டி திரை தொழில் நுட்பம் கொண்டது. இது 220 X 170 பிக்ஸல் திரை துல்லியத்தைக் கொடுக்கும்.

உயர்தரமான நிறங்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கும் சப்போர்ட் செய்ய உதவியாக இருக்கும்.

இந்த மொபைல் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க பல மீடியா ப்ளேயர் வசதியை அளிக்கிறது. எப்எம் ரேடியோ மற்றும் மியூசிக் ப்ளேயர் வசதி மட்டும் அல்ல, இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள பிரத்யேகமாக எப்எம் ரேடியோ, பட்டனும், மியூசிக் பட்டனும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் எளிதாக மியூசிக்கை ப்ளே செய்யலாம்.

3.5 எம்எம் ஆடியோ ஜேக் இதில் உள்ளது. இதனுடைய மெமரி ஸ்லாட் 2ஜிபி வரை சப்போர்ட் கொடுக்கிறது. இந்த மெமரி வசதியனால் பல பாடல்களை ஸ்டோர் செய்து பயணத்தை, இனிமையான பயணமாக மாற்ற முடியும். இதில் உள்ள 1,000 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரி 5 மணி நேரம் தொடர்ந்து கால் செய்யப் பயன்படுகிறது.

பேட்டரி பற்றிய வேறெந்த விவரமும் அவ்வளவாக தெரியவரவில்லை. இந்த மைக்ரோமேக்ஸ் கியூ-1சி மொபைல் ஆரம்பத்தில் கூறியது போல கியூவர்டி கீப்பேட் வசதி கொண்ட அற்புதமான மொபைல். இந்த மொபைல் இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் வெறும் ரூ.1,500 விலையில் வெளிவர உள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot