Home
Mobile

புதிய சிடிஎம்ஏ ஸ்மார்ட்போன்: எல்ஜி அறிமுகப்படுத்துகிறது

By Super
புதிய சிடிஎம்ஏ ஸ்மார்ட்போன்: எல்ஜி அறிமுகப்படுத்துகிறது
புதிய சிடிஎம்ஏ மொபலை அறிமுகம் செய்ய உள்ளது எல்ஜி நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு பல உயர்ந்த தொழில் நுட்பத்தை கொடுத்திருக்கிறது எல்ஜி நிறுவனம்.

இந்த எல்ஜி என்லைட்டன் மொபைல் 1 X இவி.டிஓ சிடிஎம்ஏ நெட்வொர்க் வசதி கொண்டுள்ளது. இதன் சைடு ஸ்லைடர் தோற்றம் பார்ப்பவர்களை வெகுவாக கவர்கிறது. இந்த மொபைல் 157 கிராம் எடையைக் கொண்டுள்ளது. டைப் செய்வதற்கு மிகவும் வசதியான வெர்ச்சுவல் கீப்பேட் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இது ஒரு டச் ஸ்கிரீன் வசதி கொண்ட ஹேண்ட்செட். 3.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 320 X 480 பிக்சல் கொண்டது. அதோடு இதில் பிராக்ஸிமிட்டி சென்சார் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எல்ஜி என்லைட்டன் மாடலில் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3.4 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 3.2 மெகாபிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதில் ஆட்டோ ஃபோகஸ், டிஜிட்டல் சூம், ஜியோ டேகிங், நைட் மற்றும் மேக்ரோ மோடு, ஐஎஸ்ஓ கன்ட்ரோல், வைட் பேலன்ஸ் போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 640 X 480 ரிசல்யூஷன் விஜிஏ கேமரா வசதியும் இதில் உள்ளது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்ற ஆடியோ/வீடியோ பயன்பாடுகளைக் கொண்டது.

இதனுடைய மியூசிக் ப்ளேயர் எம்பி 3, ஏஏசி, ஏஏசி+, டபிள்யூஎம்ஏ, டபிள்யூஏவி போன்றவற்றிற்கு சப்போர்ட் செய்யும். இதன் மூலம் நெட் வசதியையும் தொடரலாம். இந்த மொபைல் மிகவும் அழகாக கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 150 எம்பி மெமரி வசதி கொண்டுள்ளது.

எல்ஜி என்லைட்டன் மொபைல் மைக்ரோ எஸ்டி/மைக்ரோ எஸ்டிஎச்சி கார்ட் வசதி கொண்டுள்ளது. இதன் மெமரி வசதியினை 32 ஜிபி வரையிலும் அதிகப்படுத்திக் கொள்ள முடியும். தகவல்கள் பரிமாற புளூடூத் வசதியும், கணினியில் உள்ளவற்றை மொபைலுக்கு மாற்ற மைக்ரோ யூஎஸ்பி போர்ட் வசதியும் இதில் உள்ளது.

800 எம்எச்இசட் பிராசஸரும், 1500 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எல்ஜி என்லைட்டன் மொபைல் இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் வெளிவரலாம் என்றும், இதன் விலை ரூ.10,000 இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X