லெமன் வழங்கும் புதிய டூவோ 419 ஸ்மார்ட்போன்

லெமன் நிறுவனம் பல விதமான தரமான மொபைல்களை வழங்கி வருகின்றனர். மேலும் அவர்கள் வித்தயாசமான நவீன மொபைல்களை வழங்குவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
அதனால் அவர்களுடைய புதிய மொபைலான டூவோ 419 உறுதியாக இந்திய சந்தையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என நம்பலாம். டூவோ 419 டூவல் சிம் வசதியை வழங்குகிறது.
சிறந்த தரத்துடன் 1.3 மெகா பிக்ஸல் கேமராவையும் வழங்குகிறது. இதனுடைய வீடியோ ரிக்கார்டர் மூலமாக நாம் இலவசமாக வீடியோ ரிக்கார்டிங் செய்யலாம்.
மேலும் எப்எம் ரேடியோ மற்றும் 3 எல்இடி டார்ச்சும் பெற்றிருக்கிறது. அடுத்ததாக பார்த்தால் ப்ளூடூத் மற்றும் ஜிபிஆர்எஸ் மற்றும் டபுள்யுஎபி சப்போர்ட்டையும் வழங்குகிறது.
லெமன் டூவோ 419ன் சிறப்பு என்னவென்றால் அது மொபைல் ட்ராக்கர் வசதியைக் கொண்டிருப்பதாகும்.
இதன்மூலம், மொபைல் தொலைந்துபோனாலோ அல்லது திருடு போனாலோ எளிதாக நாம் ட்ராக்கிங் செய்ய முடியும். மேலும் இது ஆட்டோ கால் ரிக்கார்டிங் வசதியையும் வழங்குகிறது.
இதனுடைய டிஸ்பிளேயை எடுத்துக்கொண்டால் 2.4 இன்ச் டிஎப்டி வண்ண திரையாகும்.
இது எப்எம் ரேடியோ மற்றும் மியூசிக் ப்ளேயரையும் பெற்றிருக்கிறது. அதனால் இது மல்டி பார்மெட் பைல்களை சப்போர்ட் செய்யும்.
மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டுடன் கூடிய விரவுபடுத்தும் வசதி கொண்ட 8ஜிபி சேமிப்பு வசதியையும் வழங்குகிறது.
மேலும் இது 3.5 ஆடியோ ஜாக் வழங்குவதால் இதில் இசை கேட்பது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.
லெமன் டூவோ 419 மற்ற மொபைல்களில் இல்லாத நியூமரிக்கல் கீபோர்டையும் வழங்குகிறது. மேலும் நீண்ட நேரம் பேசினாலும் குறையாத 1800 எம்எஹச் பேட்டரி பேக்கப்பைக் கொண்டிருக்கிறது.
இத்தனை சிறப்பம்சங்களுடன் கூடிய லெமன் டூவோ 419வின் விலை ரூ. 4000க்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியாக இந்த மொபைல் வாடிக்கையாளர்களை கவரும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications