ஈத்தர்நெட் போர்ட் வசதியுடன் புதிய மொபைல்: லாவா அறிமுகம்

Posted By: Staff

ஈத்தர்நெட் போர்ட் வசதியுடன் புதிய மொபைல்: லாவா அறிமுகம்
வெற்றியை மட்டுமே கண்முன் வைத்துக் கொண்டு, மொபைல் உலகில் சாதனை படைக்கத் துடிக்கும் லாவா நிறுவனம் புதிய டபிள்யூ-150 என்ற மொபைலை வெளியிட்டிருக்கிறது.

ஸ்தம்பிக்கச் செய்யும் வடிவமைப்பில் இந்திய சந்தையை முகாமிட்டிருக்கிறது டபிள்யூ-150 மொபைல். 2ஜி மற்றும் 3ஜி வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற, புது வடிவம் பூண்டுள்ளது இந்த மொபைல்போன். இதில் பவர் ஸ்விட்ச் பட்டனும் உள்ளது.

இது 100 கிராம் எடையைக் கொண்டது. ஆகவே விலையிலும் சரி, எடையிலும் சரி கணத்தை ஏற்படுத்தாது.

லாவா டபிள்யூ-150 மொபைல் புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இதில் ரீசெட் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாஸ்வேர்டை மறந்துவிட்டாலும் கூட டீஃபால்ட் செட்டிங்ஸிற்கு வந்துவிட முடியும்.

புதிய எத்தர்நெட் போர்ட் தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் வைபை நெட் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. புரொடக்டிவ் ஸ்லீவ் இந்த மொபைலை தூசி படிவதில் இருந்து காக்கிறது.

150எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல்களை பரிமாற்றம் செய்யலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நேரத்தை மிச்சமாக்கிக் கொடுக்கிறது.

ஆற்றல் வாய்ந்த லித்தியம்-அயான் 2,300 பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் ரூ.3,199 விலையில் கிடைக்கும்.

எல்லா வகையிலும் இந்த மொபைல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயனை அளிக்கிறது. லாவா டபிள்யூ-150 மொபைலை வாங்கினால் பயன்பெறுவதும் நிச்சயம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot