Home
Mobile

அருமையான சிடிஎம்ஏ வசதி கொண்ட எச்டிசி ரெய்டர் போன்!

By Super
அருமையான சிடிஎம்ஏ வசதி கொண்ட எச்டிசி ரெய்டர் போன்!
மொபைல் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் எச்டிசி நிறுவனம் ரெய்டர் என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எச்டிசி ரெய்டர் மொபைலில் சிடிஎம்ஏ சிம் வசதி கொண்டதாக வருகிறது.

2ஜி நெட்வொர்க் மற்றும் 3ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் சிடிஎம்ஏ தொழில்நுட்பத்துடன் வரும் இந்த மொபைல் 4.5 இஞ்ச் மல்டி டச் ஸ்கிரீன் வசதியை கொண்டுள்ளது.

16 எம் கலர் சப்போர்ட் கொண்டது. 540 X 960 பிக்ஸல் ரிசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. பிராக்ஸிமிட்டி மற்றும் ஆக்ஸிலரோமீட்டர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மியூசிக் கேட்பதற்கு கூடுதல் ஸ்பீக்கர்களை கொண்டது. அருமையான 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் பொருத்தப்பட்டுள்ளது.

அதனால் இந்த எச்டிசி ரெய்டர் டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கு சமம் என்றும் சொல்லலாம். இதில் 16 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மெமரி வசதியை 32 ஜிபி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஹெச்டிசி ரெய்டர் ஒரு 3ஜி வசதி கொண்ட ஹேண்ட்செட்.

இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம் வழங்கப்படவில்லை. ஆனால் சூப்பர் ஃபாஸ்ட் 3.1 எம்பிபிஸ் வசதி உள்ளது. 3ஜி வசதி கொண்ட இந்த ஹெச்டிசி மொபைலில் டிஎல்என்ஏ காம்பாட்டிபிலிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் வைபை, புளூடூத், யூஎஸ்பி போர்ட் போன்ற அனைத்து சவுகர்யங்களையும் பெற முடியும். ஹெச்டிசி மொபைல் சிறந்த கேமராவையே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறது. அந்த வகையில் 8 மெகா பிக்ஸல் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டியூவல் லெட் ப்ளாஷ் ஃப்ரென்ட் கேமரா 3264 X 2448 பிக்சல் ரிசல்யூஷன் கொண்டது. எச்டி 1080பி ரெக்கார்டிங் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 1.3 எம்பி செகன்டரி கேமரா வீடியோ கான்பிரன்ஸிங் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் வி2.3 ஆப்பரேட்டிங் மூலம் இயங்குகிறது.

எம்பி4, எச்.264 வீடியோ, எம்பி3, டபிள்யூஏவி, இஏஏசி ஆடியோ போன்ற பார்மெட்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இந்த எச்டிசி ரெய்டர் மொபைலின் பேட்டரி வசதியும் இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ போன்ற ஹேண்செட்டிற்கு எச்டிசி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X