சவுண்டு எஃபெக்டில் பின்னும் புதிய ஃப்லை மொபைல்!

Posted By: Staff

சவுண்டு எஃபெக்டில் பின்னும் புதிய ஃப்லை மொபைல்!
வாடிக்கையாளர்களின் உன்னதமான பாராட்டைப் பெற அடுத்து அடுத்து பல அரிய பொக்கிஷங்களான எலக்ட்ரானிக் சாதனங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஃப்லை மொபைல் இ-321 என்ற புதிய மொபைலை இந்திய சந்தையில் வெளியிட்டிருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களாலும் வாங்கும் வகையில் மொபைல்போன்களின் விலை இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, இந்த இ-321 என்ற மொபைலை ஃப்லை நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இதனுடைய சவுன்டு சிஸ்டம் சில ஸ்பெஷல் 3டி சவுன்டு வசதியைக் கொடுக்கிறது. இப்பொழுதெல்லாம் ஒரு மொபைல் மார்கெட்டிற்கு வருகிறதென்றால், அந்த மொபைல் டியூவல் தொழில் நுட்பம் கொண்டதா இல்லையா என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

கவலை வேண்டாம்!? இது டியூவல் தொழில் நுட்பம் கொண்டது தான். இ-321 மொபைலின் விற்பனையாளர்கள், இந்த மொபைலின் ஸ்டைலே தனி என்று மிக ஸ்டைலாக சொல்லலாம். அத்தகைய வடிவமைப்பில் மின்னும் மொபைல் இது.

3.2 இஞ்ச் திரை வசதியும் இதில் உள்ளது. 125 கிராம் இலகு எடை கொண்ட இ-321 மொபைல் எச்எஸ்ஜிவிஏ மற்றும் 262 கே வசதியினையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மகிழ்விக்கிறது. அடுத்து முக்கியத்துவம் பெறுவது கேமரா.

2.0 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவினால் 1600 X 1200 பிக்ஸல் துல்லியத்தைப் பெற முடியும். புகைப்படத்தில் இடம் பெறும் எந்த ஒரு பாகத்தையும் மிக துல்லியமாக டிஜிட்டல் சூம் வசதி கொண்டு பக்கத்தில் பார்க்க முடியும். இதன் துல்லியம் நிச்சயம் உங்களையே ஒரு போட்டோகிராஃப் ரசிகராக மாற்றும் அளவிற்கு இருக்கும்.

இந்த மொபைலில் ஃபைல்கள் ஸ்டோர் செய்யும் கெப்பாசிட்டி இருக்கிறது. இதனால் விருப்பமான பாடல்களையும், வீடியோக்களையும் இதில் பதிவு செய்து பார்க்க முடியும்.

எப்எம் ரேடியோவில் ஒளிக்கும் பாடல்களையும் கேட்டு ரசிக்க முடியும். இதனால் 24 மணி நேரம் இனிமையான பொழுதுபோக்கு உங்கள் கையில். தொழில் நுட்ப நிபுணர்கள் இதில் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் வசதியினை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

இ-321 மொபைலின் டாக் டைம் வசதியினைக் கேட்டால் ஆச்சர்யப்படாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால் இந்த மொபைல் எல்ஐ-அயான் 1,200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால், தொடர்ந்து 10 மணி நேரம் 20 நிமிடம் டாக் டைம் மற்றும் 22 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினைத் தருகிறது.

நண்பர்களுடனும், உறவினர்களுடனும் விருப்பமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி ஒரு போதும் தடைபடாது. ஏனென்றால் இதில் புளூடூத் வசதி உள்ளதே. அதோடு யூஎஸ்பி வசதியும் உள்ளதால் கணிணியில் உள்ளவற்றை மிகவும் எளிதாக பதிவேற்றம் செய்யலாம்.

தகவல்களை சேகரிக்க இதன் 32 எக்ஸ்டர்னல் ஜிபி கொண்ட டேட்டா ஸ்டோரேஜ் ஸ்லாட்டைப் பயன்படுத்த முடியும். இந்த மெமரி வசதி டி-ஃப்ளாஷ் கார்டு வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

சார்ஜர், யூஎஸ்பி, இயர்போன் போன்றவற்றையும் சேர்த்து இந்த மொபைலை ரூ.4,000 விலையில் ஃப்லை இ-321 மொபைல்போனைப் பெறலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது போன்ற டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலுக்கு மக்கள் மத்தில் மவுசு குறைவதே இல்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot