Home
Mobile

விரைவில் ஆன்ட்ராய்டுடன் வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்

By Super
விரைவில் ஆன்ட்ராய்டுடன் வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்
டெல்லி: ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மல்டிமீடியா மற்றும் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் எலக்ட்ரானிக் சாதன தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான சாம்சங் முன்னிலை வகிக்கிறது.

சந்தையில் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட 20 விதமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட மல்டிமீடியா போன்களை சாம்சங் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட சாம்சங் எஸ்பிஎச்- டி600 என்ற புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டிஎப்டி தொழில்நுட்பத்தில் தொடுதிரை வசதி கொண்ட இந்த போன் சாம்சங் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை வீணடிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மெனுவுக்குள் செல்லுவதற்கான பட்டன் பிம்பங்கள் தெளிவாக புரியும் வகையிலும், எளிதாக மெனுக்களுக்குள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங், பிளேபேக் மற்றும் ஹோம்தியேட்டரில் இணைக்கும் வகையிலான 3.5 மிமீ விட்டம் கொண்ட தனி ஸ்லாட்டும் உள்ளது.

முகப்பு மற்றும் பின்பகுதியில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு கேமராக்களிலும் வீடியோ காலிங் செய்யும் வசதி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.2 மெகாபிக்செல் கொண்ட பின்பக்க கேமராவில் பிளாஷ் செய்து படம்பிடிக்கும் வசதியும் இருக்கிறது.

அதிக சேமிப்பு திறன் கொண்ட மெமரி கார்டையும் இணைத்துக்கொள்ள முடியும். பேட்டரி பேக்கப்பிலும் இது சிறப்பாக செயல்படுவதாக சாம்சங் கூறுகிறது.

3ஜி, புளூடூத், வை-பை மற்றும் கம்ப்யூட்டருடன் டேட்டா கேபிள் மூலம் வசதிகளையும் எஸ்பிஎச்- டி600ல் பெற முடியும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X