Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓம்னிவிஷன் கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 67W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் டிசைனோடு பட்ஜெட்டில் ஓப்போ ரெனோ 11 5ஜி (Oppo Reno 11 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஓப்போ ரெனோ 11 5ஜி அம்சங்கள் (Oppo Reno 11 5G Specifications): இந்த ஓப்போவில் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

அதேபோல மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் வருகிறது. இந்த ஓப்போ ரெனோ மாடலில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (Curved AMOLED Display) மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப பக்காவான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera Sytem) கொண்டுள்ளது. சோனி எல்ஓய்டி600 (Sony LYT600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. அதேபோல 32 எம்பி டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சாருடன் வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

32 எம்பி ஆர்ஜிபிடபுள்யூ (RGBW) செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி32சி (OmniVision OV32C) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்பீ கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. இந்த ஓப்போ ரெனோ 11 5ஜி போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது.

இந்த பேட்டரிக்கு 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் சப்போர்ட் வருகிறது. இந்த ஓப்போவில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

இந்த ஓப்போ ரெனோ 11 5ஜி போனானது, 182 கிராம் எடை மற்றும் 8.04 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. வேவ் கிரீன் (Wave Green) மற்றும் ராக் கிரே (Rock Grey) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக உள்ளது. இன்று முதல் விற்பனை தொடங்கியிருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, இந்த ஓப்போ ரெனோ 11 5ஜி போனை வெறும் ரூ.26,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 Percent Discount Oppo Reno 11 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X