ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.14,249 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் போக 6500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 8 ஜிபி ரேம், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்ட விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) போன் கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் சிப்செட் கொண்ட இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ டி4எக்ஸ் 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Vivo T4x 5G Flipkart Sale): இந்த விவோ போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது. இதுபோக 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.16,99ஆக இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில், 8 ஜிபி ரேம் + 128 மெமரி மாடலுக்கு ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 14,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.7,150 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரோன்டோ பர்பிள் (Pronto Purple), மரைன் ப்ளூ (Marine Blue) கிடைக்கிறது. இப்போது, முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
விவோ டி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T4x 5G Specifications): இந்த விவோ போனில் பேட்டரி சிஸ்டம் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. ஆகவே, 44W ஃபாஸ்ட் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும்படி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் கொடுக்கிறது. இந்த அடிமட்ட விலைக்கு ஏற்ப மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனின் டிஸ்பிளேவை பார்க்கையில், 6.72 இன்ச் (2408 x 1080) எல்சிடி (LCD) பேனல் வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனில் 50 எம்பி கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ஷூட், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode) போன்ற சப்போர்ட் கொடுக்கிறது.
இந்த விவோவில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. பீச்சர்கள் மட்டுமல்லாமல், குவாலிட்டியிலும் விவோ நிறுவனம் கவனம் செலுத்தி இருக்கிறது. ஆகவே, MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கடைக்கிறது. இதுபோக பட்ஜெட்டுக்கு ஏற்றபடி IP64 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.
அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கிறது. இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போனில் ஆன்-டிஸ்பிளே சென்சார் கிடையாது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மட்டுமே கிடைக்கிறது. 8.19 எம்எம் தடிமனில் ஓரளவுக்கு ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல் பட்ஜெட்டில் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுங்கள்.


Click it and Unblock the Notifications








